தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்களின் எளிமை, பணிவு, பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு துணிச்சலாகவும், ஆணித்தரமாகவும் கருத்துக்களையும் முன் வைத்து பேச கூடியவர் என்பது அனைவரும் அறிந்ததே. அண்ணாமலையின் வெள்ளந்தியான பேச்சு, நேர்மையான அணுகுமுறை, எளிமை, மக்களை அணுகும் விதம், பொறுமை, போன்றவை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் நிலையில். இனணைதளவாசி ஒருவர் அண்ணாமலை பற்றி பதிவு ஒன்றினை தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்து உள்ளார்.
நேற்று எதேச்சையாக எனது கடைக்கு எதிரில் உள்ள உணவகத்தில் உணவருந்தி விட்டு காரில் ஏறியவர் யார் என்று பார்த்தால் பாஜக மாநில தலைவர் அண்ணன் அண்ணாமலை முன்னால் IPS அவர்கள் நீண்ட நாட்களாக இவரை நேரில் பார்க்க வேண்டும் என நினைத்து கொண்டிருந்தேன் பேசுவாரா என்ற தயக்கத்துடன் அவரின் கார் கண்ணாடியை தட்டியதும் கண்ணாடியை இறக்கினார்.
சொல்லுங்க தம்பி என்றார் அண்ணா வணக்கம் எதிர்ல மாஸ்க் டீ சர்ட் கடை வச்சுருக்கன் பிரதமர் நிதி உதவி திட்டத்தில் நடைபாதை வியாபாரிகள் ஏழைகளுக்கு 10,000 நிதி நிறைய பேருக்கு கிடைச்சது ரொம்ப உதவியாக இருந்தது பிரதமரை நேரில் சந்தித்தால் அனைவரது சார்பாக நான் நன்றி தெரிவித்ததாக சொல்லுங்கள் என்றேன். உடனே காரில் இறங்கிய மனிதர் எதிரில் உள்ள கடைக்கு வந்து மாஸ்க் வாங்கிட்டு ரொம்ப சந்தோஷம் தம்பினு 5 நிமிடம் பேசிவிட்டு ஏதோ பக்கத்து வீட்டு சொந்தக்காரர் மாதிரி பேசிட்டு இருந்தார்.
பிரதமரிடம் கண்டிப்பாக சொல்லறேன் தம்பி மென்மேலும் மென்மேலும் உங்களின் தொழில் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் சொல்ல நானும் அவருக்கு உங்களின் மக்கள் பணி மென்மேலும் தொடர வாழத்துக்கள் தெரிவித்துவிட்டு விடைபெற்றார். பத்து நிமிட சந்திப்பு இவ்வளவு எளிமையான ஒரு தலைவனா என்று வியந்து போய் நின்றேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.
ஆய்வு நடத்துகிறேன் என்னும் பெயரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மு.க பணியாளர்களை வைத்து வெற்று விளம்பரம் தேடி அதன் மூலம் மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்ப முயலும் இந்த காலத்திலும் அண்ணாமலை அவர்களின் உண்மையான எளிமை சிறந்த உதாரணம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.