வட மாநில தொழிலாளர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருபவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹிந்தி படித்தால் பானிபூரி தான் விற்க வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியிருந்தார். இதனிடையே, ”ஹிந்தி தெரியாது போடா” என்ற வாசகம் கொண்ட டீ சர்ட்டை அணிந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் தனது வன்மத்தை வெளிப்படுத்தி இருந்தார். இப்படியாக, ஹிந்தி மொழிக்கு எதிராக தி.மு.க.வினர் பேசி வருகின்றனர்.
அந்தவகையில், தி.மு.க. மூத்த தலைவரும் பத்திர பதிவுத்துறை அமைச்சருமான மூர்த்தி வட மாநில தொழிலாளர்கள் குறித்து இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார் ; தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள் மட்டுமே மாநிலம் முழுவதும் வணிகம் செய்ய வேண்டும். வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்து தமிழ்நாட்டில் வணிகம் செய்ய அனுமதிக்கக் கூடாது.
வட மாநிலத்தவர் தமிழ்நாட்டில் செய்யும் வணிகத்தில் வரி முறைகேடு செய்கிறார்கள். வட மாநில வணிகர்களை தமிழ்நாட்டிலிருந்து அப்புறப்படுத்த தமிழ்நாடு வணிகர்கள் முன் வர வேண்டும். தமிழ்நாடு வணிகர்கள் முறையாக வரி செலுத்தினால் மாநிலம் வளர்ச்சியடையும், அவர்களுக்கு அரசும் துணை நிற்கும் என கூறியுள்ளார்.
இந்த நிலையில், வட மாநில தொழிலாளர்கள் பலர் தங்களது ஊருக்கு திரும்பி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், தமிழக முதல்வர் ஸ்டாலின், வடமாநில தொழிலாளர்கள் குறித்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வர் கூறுவது உண்மையெனில், அமைச்சர் மூர்த்தியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.