தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு ஹிந்து விரோத நடவடிக்கைகளில் மிக தீவிர கவனத்தை செலுத்த துவங்கி இருப்பதை ஹிந்துக்கள் தற்பொழுது உணர துவங்கியுள்ளனர். பொய்யான காரணத்தை கூறி விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை, வெள்ளி, சனி, ஞாயிறு, என மூன்று நாட்களுக்கு கட்டாயம் கோவில்களை மூட வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பது, மாற்று மத வழிபாட்டு தலங்கள் குறித்து வாய் திறக்காமல் கள்ள மெனம் காப்பது, டாஸ்மாக், மெரினா, திரையரங்கம், கல்லூரி, பள்ளி, என அனைத்திற்கும் அனுமதி வழங்கி விட்டு கோவில் மீது கவனம் செலுத்துவது நிச்சயம் உள்நோக்கம் கொண்டது என்பது அனைவரின் பார்வையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் வாரத்தில் 7 நாட்களும் கோவில்களை திறக்க வேண்டும் என்று அண்மையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்தி இருந்தார். இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் மத்திய அரசின் வழிகாட்டுதல் படியே நாங்கள் செயல்படுகிறோம் என்று கூறியுள்ளார். மத்திய அரசின் அறிக்கைக்கும் அமைச்சரின் அறிக்கைக்கும் நிறைய முரண்பாடு உள்ளது என்று பிரபல அரசியல் விமர்சகர் கிருஷ்ண குமார் முருகன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆதாரத்துடன் பதிவு செய்து உள்ளார். ஐயப்பன் மேல் சத்தியம் செய்த அமைச்சர் மீண்டும் மீண்டும் இப்படி தொடர்ந்து பொய் பேசலாமா? என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.