கொரோனா தொற்று தமிழகத்தில் மிக தீவிரமாக இருந்த சமயத்தில், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், ஆர்.எஸ்.எஸ், போன்ற அமைப்புகள் தமிழகத்தில் யாருடைய ஆட்சி நடைபெறுகிறது என்று எண்ணாமல், தமிழக மக்களின் துயரத்தை அறிந்து களத்தில் இறங்கி உதவிகளை செய்தது இன்று வரை செய்தும் வருகிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

அ.தி.மு.க ஆட்சியில் இருக்கிறதே என்றே ஒரே காரணத்திற்காக தமிழக மக்கள் குறித்து எல்லாம் கவலைப்படாமல் கொரோனா நிவாரண நிதியை வழங்காமல் கள்ள மெளனமாக இருந்து விட்டு, தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு நிவாரண நிதியை வழங்க நடிகர் சூர்யா, அவரின் தம்பி கார்த்தி, மதன் கவுரி, ஆவுடையப்பன், போன்றவர்கள் வரிசையாக தமிழக முதல்வரை சந்தித்து நிதி வழங்கி இருப்பதன் மூலம் இவர்களின் உண்மையான சுயரூபத்தை தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


