கொரோனாவை காரணம் காட்டி தி.மு.க அரசு ஹிந்து வழிபாட்டு தலங்கள் மீது மிக கடுமையான கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளது. டாஸ்மாக், சினிமா தியேட்டர், மெரினா, மால்கள், என அனைத்திற்கும் அனுமதி வழங்கி விட்டு, வெள்ளி, சனி, ஞாயிறு, போன்ற நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்காமல் விடியல் அரசு தொடர்ந்து கள்ள மெளனம் காத்து வருவது மக்கள் மத்தியில் கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவிலை திறக்க வேண்டும் என்று பா.ஜ.க தலைமையில் சமீபத்தில் போராட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பொழுது, மத்திய அரசின் வழிகாட்டுதல் படியே நாங்கள் செயல்படுகிறோம் என்று உண்மையான தகவல்களை மறைத்து பேசி இருந்தார்.
இந்நிலையில் உள்நாட்டு விமான சேவையில் இருந்த கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கி மத்திய அரசு இன்று உத்தரவு பிறப்பித்து உள்ளது. மத்திய அரசே விமான சேவைக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில் கோவில்களை வாரத்தில் 7 நாட்களும் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.