மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி, ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக என்னும் பேர் இயக்கம் தினகரன் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியுமாக அக்கட்சி இரண்டாக பிரிந்தது. அதனை தொடர்ந்து தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார் செந்தில் பாலாஜி.
திமுக எதிர்க்கட்சியாக இருந்த பொழுது கனிமொழி, ஸ்டாலின், உட்பட பல முன்னணி தலைவர்கள் செந்தில் பாலாஜி மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்திய காணொலி-யை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செந்தில் பாலாஜி மீது பகீர் குற்றச்சாட்டினை சுமத்தியது மட்டுமில்லாமல் சில ஆதாரங்களை முன் வைத்து இருந்த நிலையில் அண்ணன், தங்கை, என இரு பாச மலர்கள் பாலாஜியை வறுத்தெடுத்த பேச்சுக்களை தோண்டி எடுத்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர்.