அனைவருக்கும் சேவை செய்வேன் என்று வாக்குறுதி கொடுத்தவர் தி.மு.க தலைவர் ஸ்டாலின் என்பது அனைவரும் அறிந்ததே.
தி.மு.க ஒன்றும் சங்கரமடம் அல்ல வாரிசு அரசியலுக்கு நாங்கள் எதிரி என்பது போல் தி.மு.க-வின் முன்னாள் தலைவர் கலைஞர் கூறி இருந்தார். அதனை தொடர்ந்து ”என் குடும்பத்தில் இருந்து எனது மகனோ, மருமகனோ, யாரும் எனக்கு பிறகு அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று தனது தந்தையை மிஞ்சும் வகையில் அவர் கூறிய பழைய பொன்மொழிக்கு புதிய வர்ணம் பூசி ஸ்டாலின் கூறியிருந்தார்.
தி.மு.க தலைவராக ஸ்டாலின் இருந்த பொழுது ஹிந்து மதத்திற்கு வாழ்த்து கூறுவதும், கூறாமல் இருப்பதும் அவரின் தனிப்பட்ட விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாது என்பது நிதர்சனம். எப்பொழுது அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்றாரோ அப்பொழுதே அவர் அனைவருக்குமான தலைவராக மாறி விடுகிறார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. முதல்வராக பதவியேற்கும் பொழுது ஆளுநர் முன்பு விருப்பு, வெறுப்பின்றி, அனைவருக்கும் சேவை செய்வேன் என்றே உறுதி மொழியை நாட்டு மக்களுக்கு வழங்குகிறார்.
ஆனால் இன்று வரை தமிழக முதல்வர் ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, தீபாவளி உட்பட எந்த ஒரு ஹிந்து பண்டிக்கைகளுக்கும் தனது வாழ்த்துக்களை கூறாமல் தொடர்ந்து அவர்களை புறக்கணித்து வருவது கடும் கண்டனத்திற்குறியது என்பது அனைவரின் கருத்து.
இந்நிலையில் மக்கள் மனதிலும், தி.மு.க-வினர் மனதிலும் உளவியல் ரீதியாக இன்பநிதியை திணிக்கும் முயற்சி தற்பொழுது மிக தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நேரம் நான்காம் கலைஞரே, ஐந்தாவது அண்ணாவே, சின்ன பெரியாரே, என்று இன்பநிதிக்கு முட்டு கொடுத்து போஸ்டர் ஒட்ட விலையில்லா உடன்பிறப்புகள் கிளம்பியிப்பார்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எந்தவித பொறுப்பும் இல்லாத சேப்பாக்கம் சேகுவேரா நோட்ஸ் எடுக்க கல்வித்துறை அமைச்சர் நிற்க