மழை வெள்ளத்தில் கடுமையாக பாதித்த சென்னை மக்களின் நிலை கண்டு பா.ஜ.க தலைவர் திமுக-வின் மீது பாய்ச்சல்.
மழை வெள்ளத்தில் கடுமையாக பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஏழை, எளியவர்களுக்கு, தேவையான உதவிகளை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வழங்கினார். அதனை தொடர்ந்து தனது முகநூல் பக்கத்தில் தி.மு.க அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டினை முன்வைத்து விடியல் அரசிற்கு இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணாமலையின் முகநூல் பதிவு.
‘திராவிட வளர்ச்சித் திட்டம்’ என்ற பொய்யான பிம்பத்தை ஒருவர் பார்க்க வேண்டுமென்றால் தமிழக முதலமைச்சர் அவர்களின் கொளத்தூர் தொகுதியை பார்வையிட வேண்டும். முதலமைச்சர் தொகுதிக்குள் வரும்போது பொதுமக்களின் வீட்டிற்கு வெளியே கயிறு கட்டி அவர்களை வெளியே வரவிடாமல் தடுப்பது, Photoshop செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவது என்று கீழ்த்தரமான அரசியலை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார்.
இதில் கொடுமை என்னவென்றால் அவர் சென்னையின் மேயராக இருந்த பொழுதும், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக இருந்த பொழுதும், தற்போது தமிழக முதலமைச்சராகவும் அதே இடங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டுக் கொண்டு இருக்கின்றார்.
அப்படியெனில் அவர் அந்தப் பதவிகளில் இருந்த பொழுது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எதையுமே செய்யவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது. வெற்று அறிவிப்புகளும் செயல்படுத்தாத வாக்குறுதிகளும் தான் திமுகவின் வளர்ச்சித் திட்டம் போல என கேள்வி எழுப்பியுள்ளார்.