தமிழக முதல்வரின் தொகுதி மக்கள் வேதனை.
தமிழகம் உட்பட சென்னை முழுவதும் பலத்த மழையின் காரணமாக ஏழை, எளியவர்கள், உட்பட பலர் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, பா.ஜ.க, பல தொண்டு நிறுவனங்கள், உட்பட பலர தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க செல்லும் இடங்களில் எல்லாம் பலர் தங்கள் உணர்வுகளையும், வேதனைகளையும், தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். எங்களுக்கு சோறு வேண்டாம் நிரந்தர தீர்வு தான் வேண்டும் என பெண் ஒருவரும் இது தான் விடியலா என மற்றொரு நபரும் முதல்வரிடம் கேள்வி எழுப்பிய காணொளி இன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முதல்வரின் கொளத்தூர் தொகுதியும் மிக கடுமையாக பாதிகப்பட்டுள்ள நிலையில், Behindwoods நெறியாளரிடம் 2 முறை ஸ்டாலின் எம்.எல்.ஏ தற்பொழுது முதல்வரின் தொகுதி இது இதே பிரச்சனை தொடர்வதாக வேதனையுடன் தனது கருத்தினை தெரிவித்து உள்ளார். சென்னையை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று கூறிய ஸ்டாலின், வெனீஸ் நகரை போல தமிழகத்தை மாற்றி விட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.