பா.ஜ.க மூத்த தலைவரும், செய்தி தொடர்பாளருமான, அஸ்வத்தாமன் பெரம்பலூர் மாவட்டத்தில் ஹிந்து ஆலயங்கள் மீது தாக்குதல்கள் நடைப்பெறுவது குறித்து இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மூன்று முறை சிறுவாச்சூர் மலைக்கோவில் இடிக்கப்பட்டிருக்கிறது. முதல்முறை அந்தக் கோவில் இடிக்கப்பட்டபோதே காவல்துறையும், அறநிலையத்துறையும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இது நடந்திருக்காது. முதல்முறை தொடர்ந்து இரண்டு நாட்கள் சிறுவாச்சூர் மலைக்கோவிலில் உள்ள சுடுமண் சிற்பங்களும் , தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரியாண்டவர் கோவிலில் உள்ள கற்சிற்பங்களும் இடிக்கப்பட்டன.
அப்போது காவல்துறை, மனநிலை சரியில்லாத ஒருவரை பிடித்து வைத்துக்கொண்டு, அவர் தான் அத்தனை சிலைகளையும் இடித்தார் என கூறியது. நாம் ஆரம்பித்திலிருந்து சொல்வது இதுதான், தனி மனிதனால் இவ்வளவு பெரிய சிலைகளையும் (17 அடி) , மிகவும் வலிமையான கற்சிலைகளையும் உடைத்திருக்கமுடியாது . குறைந்தபட்சம் ஐந்துபேர் கொண்ட அதுவும் , SUV போன்ற பெரிய வாகனத்தில் ஆயுதங்களோடு வந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம். அது காட்டுப்பகுதி.
ஆனால், மனநிலை சரியில்லாத ஒருவரை பிடித்துக்கொண்டு அவர் மட்டும் தான் காரணம் என்று ஆரம்பத்திலிருந்து திசை திருப்புகிறது மாநில அரசு. அதுவும் அதற்கு காவல்துறை சொன்ன காரணம் நகைச்சுவையின் உச்சம். கற்சிலைகளின் அடியில் வைக்கப்பட்டிருக்கும் செப்பு தகடுகளுக்காகத்தான் அத்தனை சிலைகளையும் உடைத்தாராம். அப்படி என்றால் சுடுமண் சிற்பங்கள் ஏன் உடைக்கப்பட்டது.
முதல் தாக்குதலின்போதே பிடிபட்ட அந்த நபர், அப்போதே கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது மூன்றாவது தாக்குதலை நிகழ்த்தியது யார்? மூன்றாவது தாக்குதல் நடந்த அடுத்த நாள், அந்த இடத்தில் அந்த நபர் பிடிபட்டார் என்றால் அவருக்கு ஜாமீன் வழங்கியது யார்?
இரண்டாவது தாக்குதலுக்கு பிறகு மலைக்கோவிலில் CCTV வைக்கப்பட்ட நிலையில் அந்த தாக்குதல் வீடியோவை வெளியிடாதது ஏன்?இரண்டுமுறை பிடிபட்ட போதும் அந்த நபரின் கையில் ஆயுதம் எதுவுமே கைப்பற்றப்படாத நிலையில், அவர் தான் இடித்தார் என எப்படி முடிவு செய்யப்பட்டது? அல்லது ஆயுதங்களே இல்லாமல் அவர் வெறும் கையால் எப்படி அத்தனை சிலைகளையும் உடைத்தார்?
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் கோடிக்கணக்கான வருமானம் வருகிற பிரபலமான ஒரு கோவில், அதன் ஒரு பகுதி தான் அந்த மலைக்கோவிலும் ( சக்தி வாரத்தின் ஐந்து நாட்கள் இங்கு இருப்பதாகவே ஐதீகம் ) இந்த கோவில்கள் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. யோசித்து பாருங்கள்.
அந்த கோவிலிலிருந்து கோடிக்கணக்கில் வருமானத்தை வாரி சுருட்டும் அறநிலையத்துறை, அந்த கோவில் இப்படி அநியாயமாக மூன்று முறை இடிக்கப்பட்டும் கண்டுகொள்ளவே இல்லையே? அந்தக் கோவில், அரசால் ஆக்கிரமிக்கப்படாமல் இருந்து உடையவர்களிடமே இருந்திருந்தால் இப்படி விட்டிருப்பார்களா? அரசின் சொத்துக்களின் மீது சின்ன சேதம் ஏற்படுத்தினால் பொது சொத்துக்களை சேதப்படுத்தினார்கள் என வழக்குபோடும் மாநில அரசு , கோவிலிலிருந்து வருமானத்தை மட்டும் உறிஞ்சிக்கொள்ளும். அதற்கு ஒரு சேதம் என்றால் கண்டுகொள்ளுவதே இல்லையே?!
ஒரு மதசார்பற்ற அரசிற்கு இந்து கோவில்களில் என்ன சார் வேலை?வருமானத்தை உறிஞ்சும்போது “அரசு சொத்து” ! சேதப்படுத்தப்படும்போது மட்டும் “கோவில் சொத்து”!
இப்படித்தான் இடிக்கப்பட்டது ஆந்திர மாநிலத்தில் 128 கோவில்கள் (அதுவும் வெறும் 19 மாதங்களில் )
அதுபோல , 128 கோவில்கள் இங்கும் இடிபடும்வரை வேடிக்கை பார்க்கப்போகிறோமா?
இனியேனும் விழித்துக்கொள்வோம் !
சரி . என்ன சார் செய்யணும் நாங்க ?!
ஒன்றும் இல்லை . மிகவும் சுலபமாக ஒன்றை செய்வதன் மூலம் கோவில் சொத்துக்களை இந்த கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றலாம்.
உண்டிலில் காசு போடவேண்டாம் . உண்டிலை புறக்கணிப்போம்.
நம் கோவிலை அழிப்பதற்கு இனி அரசிற்கு நாமே கூலி கொடுக்கவேண்டாம்.
கோவிலுக்கு போங்க! உண்டியலில் காசு போடாதீங்க !
முன்னெடுப்போம் இந்த விழிப்புணர்வை வாருங்கள் !