ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி மற்றும் வழக்கறிஞராக பணியாற்றி வரும் வரதராஜ் அவர்கள் தி.மு.க அரசு மீது பகீர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் களமிறங்கின ஆனால் இம்முறை சென்னையை நோக்கி உதவிக்கரம் நீட்ட பெரும்பாலான தன்னார்வலர்கள் முன்வரவில்லை ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி போன்ற ஒரு சில அமைப்புகள் தான் களத்தில் நிற்கின்றன.
இதற்கான காரணம் குறித்து ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி வரதராஜ் கூறுகையில் : உதவி செய்ய வருபவர்கள் கொண்டு வரும் நிவாரண பொருட்களில் திமுக ஸ்டிக்கர் ஓட்டினால் மட்டுமே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திமுகவினர் அவர்களை அனுமதிப்பதாகவும். மீறி நுழைய முயல்பவர்களுக்கு அடி உதைத்தான் கிடைப்பதாகவும் கூறியுள்ளார்.
இவரது கருத்துக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக கொளத்தூர் தொகுதியில் நிவாரணப் பணிகளிகளில் ஈடுபட்டிருந்த RSS சேவாபாரதி அமைப்பினரை திமுக பொறுப்பாளர் முஸ்தப்பா என்பவர் மிரட்டியதோடு திமுக ஸ்டிக்கர் ஓட்ட சொல்லி ரகளையில் ஈடுபட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.