குரல் அற்றவர்களின் குரலாக ஒலிப்பேன் என்று கூறிய நெறியாளர் செந்தில் எங்கே? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள், நெறியாளர்கள், என்னும் போர்வையில் தி.மு.க ஆட்சியில் நிகழும் அட்டூழியங்கள், அடாவடிகள், குறித்து எல்லாம் பேசாமல், முன்கப்பணியாளர்கள் இன்று வரை ஆளும் கட்சிக்கு முட்டு கொடுத்து வருகிறது என்பது அனைவரின் கருத்தாக இருந்து வருகிறது. ஏழை, எளியவர்களுக்கு, அநீதி இழைக்கப்பட்டால் நிச்சயம் குரல் கொடுப்பேன், குரல் அற்றவர்களின் குரலாக ஒலிப்பேன் என்று தொடர்ந்து வசனம் பேசி வந்த நெறியாளர் செந்தில். தி.மு.க ஆட்சியில் நிகழ்ந்த கொடூர சம்பவங்கள் குறித்து வாய் திறக்காமல் இருப்பதன் மூலம் இவரின் உண்மையான சுயரூபம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
- தி.மு.க அமைச்சர் பொன்முடியை வரவேற்கும் திருமண நிகழ்ச்சியில். கொடிக்கம்பம் நடும் பணியில் 13-வயது உடைய தினேஷ் என்னும் சிறுவன் ஈடுபட்ட பொழுது மின்சாரம் தாக்கி உயிர் இழந்த சம்பவத்திற்கு மெளனம்.
- முதல்வர் வீட்டின் முன்பு தீ குளித்து சிகிச்சை பலனின்றி உயிர் இழந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த வெற்றிமாறனுக்கு கூட குரல் கொடுக்காமல் மெளனம்.
- அப்பாவை குடிக்க வேண்டாம்ணு சொல்லுங்க என்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட +1 மாணவனின் மரணத்திற்கு நீதி கேட்காமல் மெளனம்.
- பெரம்பலூர் சிறுவன் கவியரசன் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தது குறித்து பேசாமல் மெளனம்.
- மழை நீரில் நடந்து சென்ற சென்னை சிறுமி கமலி மின்சாரம் தாக்கி உயிர் இழந்தது குறித்து பேசாமல் மெளனம்.
பா.ஜ.க, அண்ணாமலை, மோடி, மத்திய அரசு, என்றால் உடனே உயிர்த்தெழும் தோழர் செந்தில், தி.மு.கவின் கழக முன்னோடிகள், மூத்த நிர்வாகிகள், விடியல் ஆட்சியின் தோல்விகள் மற்றும் அக்கட்சியினர் செய்யும் அக்கபோருகளை கண்டிக்காமல் ஏன்? தொடர்ந்து ஊமையாக இருக்கிறார் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். .