விவசாயிகளின் நிலத்தை அனுமதியின்றி பறிக்கும் தி.மு.க அரசு.
தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த பொழுது சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு, இப்பொழுது ஆளும் கட்சியாக ஆன பின்பு அதே திட்டத்தை வேறு ஒரு பெயரில் நிறைவேற்ற முயற்சி மேற்கொள்வது, விவசாயிகள் விரும்பாத பல நடவடிக்கைகளை தி.மு.க அரசு உடனே நிறைவேற்ற துடிப்பது என தொடர்ந்து ஏதேனும் ஒரு செயலை செய்து கொண்டு வரும் நிலையில். கோவை மாவட்டம் அன்னூரில் 3832-ஏக்கர் விவசாய விளைநிலங்களை மாநில அரசு தொழிற்பேட்டை அமைப்பதாக கூறி கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
இது அந்த மாவட்ட விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல், இது குறித்து எந்த ஒரு அரசியல் கட்சியும், ஊடகங்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முன்வராத நிலையில். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் மட்டுமே நேரடியாக விவசாயிகளை சென்று சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்து உள்ளார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது போல் 3,832 ஏக்கர் விவசாய நிலத்தை தி.மு.க அரசு தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குறியது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.