சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முத்தமிழறிஞர் கலைஞருக்கு சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த சட்ட பேரவை கூட்டத்தில் தஞ்சாவூர் தி.மு.க எம்.எல்.ஏ நீலமேகம் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு தமிழக முதல்வர் இவ்வாறு பதில் அளித்து இருந்தார்.
“கடந்த காலத்தில் சென்னை அண்ணாசாலையில் முறையான அனுமதி பெற்று முத்தமிழறிஞர் கலைஞருக்கு சிலை வைக்கப்பட்டது. ஆனால் எக்காரணத்திற்காக சிலை அகற்றப்பட்டது என்று நான் சொல்லத் தேவையில்லை. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சென்னை அண்ணா சாலையில் முன்பு இருந்த அதே இடத்தில் கலைஞர் அவர்களுக்கு மீண்டும் சிலை அமைக்கப்பட வேண்டும் என்று என்னிடம் வலியுறுத்தினார்.
சென்னை அண்ணா சாலையில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் சிலையை அமைக்க பல்வேறு தரப்பினரும் கோரியிருந்தனர். சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்து, அண்ணா சாலையில் ஏதாவது ஒரு இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சிலை அமைக்கப்படும்” எனத் தெரிவித்து இருந்தார்.
நன்றி ; கலைஞர் நியூஸ்
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
தமிழகம் முழுவதும் பொது இடங்கள், சாலைகளில் உள்ள தலைவர்கள் சிலைகளை 3 மாதங்களில் அகற்ற வேண்டும். தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு நெடுஞ்சாலைகள், அரசு புறம்போக்கு நிலங்களில் சிலைகள் அமைக்க இனி அனுமதி வழங்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருப்பதால் கலைஞர் சிலை அமைக்கப்படுமா என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.