பாரதப் பிரதமருக்கு எதிராக கருத்து பதிவு செய்ய கூடாது தி.மு.க தலைமை அதிரடி உத்தரவு.
பாரதப் பிரதமர் மோடியை விமர்சனம் செய்ய கூடாது என்று தி.மு.க தலைமை கட்சி தொண்டர்களுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளதாக ONE INDIA செய்தி வெளியிட்டு உள்ளது. 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க அடுத்த மாதம் பிரதமர் தமிழகம் வர உள்ள நிலையில் இந்த செய்தி வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி தமிழகம் வரும் பொழுது பணம் கொடுத்து ’கோ பேக்’ மோடி என்று தி.மு.க விளம்பரம் செய்வது அதன் வாடிக்கை என்று பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில். பிரதமருக்கு எதிராக யாரும் கருத்து கூற கூடாது என்று தி.மு.க தலைமை அதிரடி உத்தரவு போட்டு உள்ளது.
எந்த கட்சி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்ததோ, அதே கட்சியே மோடியை வரவேற்கும் சூழல் தற்பொழுது ஏற்பட்டு உள்ளது. மக்கள் தலைவரான மோடிக்கு எதிராக தி.மு.க-வினர் செய்த அல்ப தனத்திற்கு இது பதிலடி என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தி.மு.க-வை தெறிக்க விட்ட மீம்ஸ்கள் உங்கள் பார்வைக்கு.
தி.மு.க மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரதமர் மோடி எங்கள் நிரந்தர எதிரி கிடையாது அவர் எங்கள் விருந்தாளி என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.