தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விஜயகாந்த் கடும் கண்டனம்.
கோவை பள்ளி மாணவி தற்கொலை, திருநெல்வேலியில் மூன்று மாணவர்கள் மரணம், திருவெற்றியூரில் குடிசை மாற்று வாரியம் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம், என தமிழகத்தில் தொடர் சோக சம்பவங்கள் இன்று வரை நிகழ்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூற வேண்டியவர் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
ஆனால் அதனை எல்லாம் மறந்து விட்டு வீடு வீடாக சென்று தனது கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையில் முதல்வரே நேரடியாக சென்ற சம்பவம் தமிழக. மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் நோக்கர்கள், பொதுமக்கள், என பலர் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில். தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளார்.
