நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை வெளியிட்ட தி.மு.க அரசு..!

நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை வெளியிட்ட தி.மு.க அரசு..!

Share it if you like it

நாங்க ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தமிழக மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தது திமு.க அரசு. ஆனால் ஆளும் கட்சியாக ஆன பின்பு நீட் தேர்வை ரத்து செய்ய முடியாமல் இன்று வரை திணறி வருகிறது. நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு தங்களது ஆதரவினை தெரிவிக்குமாறு கேளரம், ஆந்திரம் உள்ளிட 12 மாநில முதல்வர்களுக்கு அண்மையில் கடிதம் எழுதி இருந்தார் அதில் இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு அரசு இதுவரை எடுத்துள்ள முயற்சிகள் மற்றும் நீதியரசர் ஏ.கே ராஜன் குழுவின் அறிக்கையின் மொழிபெயர்ப்பு நகலை பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேரில் சென்று வழங்குவது மற்றும் இப்பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைப்பாட்டிற்கு அந்தந்த மாநில அரசுகளின் ஆதரவைக் கோர வேண்டும் என்பதே அதன் முக்கிய நோக்கமாகும்.

இந்நிலையில் தமிழக நிதியமைச்சர் நீட் தேர்வு பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்து உள்ளார்.

நீட் தேர்வின் தாக்கம் குறித்த நிதியரசர் ஏ.கே.ராஜனின் அறிக்கை தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, மராத்தி  ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளன. போதுமா… Wait… சமஸ்கிருதம் எங்கப்பா ன்னு நானும் கேட்டேன்… அது செத்து ரொம்ப நாளாச்சு ன்னு சொல்றாங்க பா என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று கூறிவிட்டு, தி.மு.கவின் தீவிர ஆதரவாளர் நீதிபதி ஏ.கே ராஜன் வழங்கிய பொய் அறிக்கையை அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்த்து அம்மாநில முதல்வர்களுக்கு அறிக்கை அனுப்புவது தான் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியமா? என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நீட் ரத்து ரகசியம் தெரிந்த உதயநிதி, ஓய்வு பெற்ற நீதிபதியிடம் மனுவுடன் மன்றாடிய பரிதாபம்!
மனு கொடுத்த உதயநிதி
Image
Image


Share it if you like it