ஆளும் கட்சி எம்.எல்.ஏ. வேலுமணி… வழக்கம்போல உளறிக் கொட்டிய ஸ்டாலின்!

ஆளும் கட்சி எம்.எல்.ஏ. வேலுமணி… வழக்கம்போல உளறிக் கொட்டிய ஸ்டாலின்!

Share it if you like it

ஆளும்கட்சி எம்.எல்.ஏ. எஸ்.பி.வேலுமணி என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

தேர்தல் சமயத்தில் மக்களுக்கு கொடுத்த பல வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்ற முடியாமல் திணறி வருகிறது தி.மு.க. அரசு. இதனால், மக்களின் கடும் கோவத்திற்கு உள்ளான ஆளும்கட்சி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. எனவே, அக்கட்சி குறுக்கு வழியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட அதிக வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன. அந்த வகையில், வெளியூர்களில் இருந்து ஏராளமானோரை கோவை மாவட்டத்திற்கு அழைத்து வந்திருந்தது ஆளும்கட்சி.

எனவே, அப்படி அழைத்து வரப்பட்டவர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற்றி, தேர்தலை நியாயமான முறையில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். துணை ராணுவப் படையை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். கோவை மாவட்ட மக்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார் தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி. இதை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், சென்னையில் வாக்களித்து விட்டு வெளியில் வந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்பொழுது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வேலுமணியை ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. என்று குறிப்பிட்டார். தி.மு.க. ஆட்சிக்கு வந்து 9 மாதங்களை கடந்து விட்ட நிலையிலும் கூட, இன்றும் எதிர்க்கட்சி தலைவர் போல ஸ்டாலின் பேசி வருவதுதான் மக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Image result for ஸ்டாலின் கணக்கு

Share it if you like it