நாப்கினால் அசிங்கப்பட்ட தி.மு.க. எம்.பி. அப்துல்லா!

நாப்கினால் அசிங்கப்பட்ட தி.மு.க. எம்.பி. அப்துல்லா!

Share it if you like it

சானிடரி நாப்கினுக்கான ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு ரத்து செய்து 4 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில், நாப்கினுக்கு 12% ஜி.எஸ்.டி. முக்கியமா என்று தி.மு.க. எம்.பி. அப்துல்லா, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதுதான் மக்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவோம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது தி.மு.க. ஆனால், அது பற்றி இன்றுவரை பேசாமல் கள்ள மெளனம் காத்து வருகிறது. இது ஒருபுறம் என்றால், தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ஜி.எஸ்.டி. பற்றி எந்தவித அடிப்படை புரிதலும் இல்லாமல், பிரபல தனியார் டி.வி.யில் உளறிக் கொட்டினார். தற்போது என்னவென்றால், ‘ஒரு பெண்ணுக்கு சானிடரி நாப்கின் முக்கியமா அல்லது வைரம் முக்கியமா? அப்படி இருக்க நம் நாட்டில் சானிடரி நாப்கினுக்கு எதற்கு 12% வரி’ என்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பி இருக்கிறார் தி.மு.க. எம்.பி. எம்.எம்.அப்துல்லா.

உண்மை என்னவென்றால், சானிடரி நாப்கினுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு சமூகநல அமைப்பினர் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 28-வது கூட்டத்தில் முழு வரி விலக்கு அளிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு, தமிழ்நாடு (அ.தி.மு.க. ஆட்சியில்) மற்றும் பாண்டிச்சேரி நரம்பியல் நிபுணர்கள் சங்கம் மத்திய அரசுக்கு தங்களது பாராட்டையும், நன்றியையும் தெரிவித்திருந்தனர். இப்படி, சானிடரி நாப்கினுக்கு ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்து 4 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில், அதுகூட தெரியாமல் மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. கேள்வி எழுப்பி இருப்பது தமிழக மக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதை வைத்து தி.மு.க. எம்.பி.க்களை நெட்டிசன்களை வச்சு செய்து வருகிறார்கள்.

Image

Share it if you like it