செக்கு எண்ணெய்: தி.மு.க. எம்.பி. அடடே விளக்கம்!

செக்கு எண்ணெய்: தி.மு.க. எம்.பி. அடடே விளக்கம்!

Share it if you like it

செக்கு எண்ணெயை பயன்படுத்துவது ஜாதியையும், அரசியலையும் புகுத்தும் முயற்சி என்று தி.மு.க. மாநிலங்களவை எம்.பி. அப்துல்லா தெரிவித்திருக்கும் கருத்து சமூக வலைத்தளவாசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நம் நாட்டில் சானிடரி நாப்கினுக்கு 12% வரி. ஆனால், வைரத்திற்கு 5% வரி குறைப்பு? ஒரு பெண்ணுக்கு சானிடரி நாப்கின் முக்கியமா அல்லது வைரம் முக்கியமா? என்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பி கேலி, கிண்டலுக்கு ஆளானவர் தி.மு.க. எம்.பி. எம்.எம்.அப்துல்லா. ஆனால், சானிடரி நாப்கினுக்கு ஜி.எஸ்.டி. 0% என்று நடைமுறைக்கு வந்து 4 வருடங்களை கடந்து விட்டது. இதுகூடத் தெரியாமல் தி.மு.க. எம்.பி. பேசியது அவையில் இருந்த சக எம்.பி.க்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், சிரிப்பலையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில்தான், பிரபல ஊடகமான நியூஸ் 18 தொலைக்காட்சி, பாரம்பரிய முறையில் செக்கில் மாடு பூட்டி எண்ணெய் தயாரிக்கும் பொறியியல் பட்டதாரி குறித்த காணொளி ஒன்றினை வெளியிட்டிருந்தது. இதற்குத்தான் தி.மு.க. எம்.பி. அப்துல்லா புது விளக்கம் அளித்திருக்கிறார். இதுதான் நம்ம பாரம்பரியம் என்பார்கள்.. நம் பாரம்பரியமே சிறந்தது என்பார்கள்! பின்னர், கடைசியாக நம்ம பாரம்பரியப்படி ஜாதி முறையே சிறந்தது என்பார்கள்!! இந்த ஜாதிக்காரன் நீ போயி இந்த வேலையைப் பாரு என்பார்கள்!! பாரம்பரிய போர்வையில் வரும் அனைத்தும் சங்கி அரசியல் திட்டமே! என்று கூறியிரிக்கிறார்.

தி.மு.க. எம்.பி.யின் இந்த கருத்துக்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். ‘செக்கில் எண்ணெய் ஆட்டினால் ஜாதி வந்திடும்.. கைத்தொழில் கற்க சொன்னால் குலக்கல்வி ஜாதி வந்திடும். இவர்கள் ஜாதி என்ற பூச்சாண்டி காட்டி 70 வருஷமா ஜாதிய ஒழிக்கல. மாறாக, இந்த மண்ணின் மரபுகளை அழித்து, நாலு வயசு குழுந்தைக்கு முக்காடு போடும் பாரம்பரியத்தை வளர்ப்பதே நோக்கமாக இருக்கு’ என்று சவுக்கடி கொடுத்திருக்கிறார்.


Share it if you like it