நீலகிரியில் சட்ட விரோதமாக சாலை அமைக்கும் பணி தீவிரம்.
வன விலங்குகளின் நடமாட்டம் மற்றும் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக கூறப்படும் ரிசார்ட், லாட்ஜிகள், மீது மிக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத பணம் படைத்த முதலைகள், தொழிலதிபர்கள், இதற்கு தங்களின் கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தனர்.
இதனை அடுத்து முக்கிய அரசியல் புள்ளிகள் கொடுத்த தொடர் அழுத்தத்தையும், விடியல் ஆட்சி கொடுத்த தொல்லையும் தாங்கி கொள்ள முடியாமல். சமீபத்தில் நீண்ட விடுப்பு எடுத்து கொண்டார். இதனை தனக்கு சாதகமாக மாற்றி கொண்டு நீதிமன்றத்தை நாடி மாவட்ட ஆட்சியரை மாற்றி விட்டது தி.மு.க அரசு.
இந்நிலையில் நீலகிரியில் தடையை மீறி பொக்லைன் இயந்திரங்களை மறைத்து தனியார் விடுதுகளுக்கு சாலை அமைத்து வருவதாக பிரபல இணையதள ஊடகமான ஜீனியர் விகடன் அதிர்ச்சி காணொளி ஒன்றினை வெளியிட்டு உள்ளது.
வன விலங்குகளின் பாதுகாவலர்கள் என்று தம்மை கூறிக் கொள்ளும் பியூஸ் மானுஸ், சீமான், பூ உலகின் நண்பர்கள், சில்லறை போராளிகள், உட்பட யாரும் இன்னசென்ட் திவ்யாவிற்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தோ, ரிசார்ட்களின் முதலாளிகள் செய்து வரும் அட்டூழியம் குறித்தோ வாய் திறக்கவில்லை. மாறாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் மட்டுமே மாவட்ட ஆட்சியருக்கு குரல் கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.