தி.மு.க-வின் கொடி கம்பம் மோதி மாணவியின் மூக்கு உடைந்த சம்பவம்.
ஆளும் கட்சியாக தி.மு.க மாறிய பின்பு தமிழக முதல்வர் ஸ்டாலின், சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதி, தி.மு.க அமைச்சர்கள், எல்.எல்.ஏக்களை வரவேற்க தி.மு.க-வை சேர்ந்த தொண்டர்கள் அரசு விதிமுறைகளை மீறி பேனர் வைப்பது, கொடி கம்பம் நடுவது இன்று வரை தொடர்கதையாக இருந்து வருகிறது.
தி.மு.க அமைச்சர் பொன்முடியை வரவேற்கும் திருமண நிகழ்ச்சியில். கொடிக்கம்பம் நடும் பணியில் 13-வயது உடைய தினேஷ் என்னும் சிறுவன் ஈடுபட்ட பொழுது மின்சாரம் தாக்கி சமீபத்தில் உயிர் இழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் சேலம் மாவட்டம் தாதகாப்பட்டியில் பள்ளி மாணவி ஒருவர் மீது தி.மு.க கொடி கம்பம் மோதியதில் அவரின் மூக்கு உடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பேனர், கொடி கம்பம், நடுவதில் கடுமையான கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துள்ளது. ஆனால் அதனை எல்லாம் புறக்கணித்து விட்டு தி.மு.கவினர் தங்கள் விருப்பம் போல இன்று வரை செயல்பட்டு வருவது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். மாணவன் தினேஷ் மரணத்தை பார்த்த பின்பு கூட விடியல் அரசு தன்னை திருத்தி கொள்ளாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குறியது என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.