இதுதான் திராவிட மாடல் ஆட்சியா..?

இதுதான் திராவிட மாடல் ஆட்சியா..?

Share it if you like it

தி.மு.க.வை சேர்ந்த பேச்சாளர் ஒருவர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, உரிய மரியாதை கொடுக்காமல், ஆபாசமாக திட்டிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தி.மு.க ஆட்சி பொறுப்புக்கு வரும் முன்பு பிரியாணி கடை, சுண்டல் கடை, ஓசி தேங்காய் கடை மீது தாக்குதல், ஆட்சிக்கு வந்த பின்பு அம்மா உணவகம், அம்மா கிளினீக் மீது தாக்குதல் என சட்டம் ஒழுங்கு, தமிழகத்தில் தொடர்ந்து சந்தி சிரிக்கும் நிலையில் உள்ளது. மேலும், பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது என்பது பலரின் குற்றச்சாட்டாக உள்ளது.

அந்த வகையில், தமிழக பா.ஜ.க.வின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவின் தலைவரும், பிரபல நடிகையுமான காயத்திரி ரகுராமை தி.மு.க நிர்வாகி ஜெயசந்திரன் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்து இருந்தான். இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என காயத்திரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருந்தார். ஆனால், இன்று வரை அவன் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

ஆளும் கட்சியை சேர்ந்தவர் தவறு செய்தால் கள்ள மெளனம், எதிர்க்கட்சியை சேர்ந்தவர் என்றால் உடனே வழக்கு பதிவு, இதுதான் தமிழகத்தின் தற்பொழுதைய நிலை இப்படியாக, விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து மோசமாகி கொண்டே வருகிறது. அந்த வகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தி.மு.க ஆபாச பேச்சாளர் ஒருவர், மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் உள்ளார். ஆளுநருக்கே இந்த மரியாதை என்றால் தமிழக பெண்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வி.


Share it if you like it