மக்கள் உயிரை துச்சமென கருதும் தி.மு.க. அரசு!

மக்கள் உயிரை துச்சமென கருதும் தி.மு.க. அரசு!

Share it if you like it

தி.மு.க. அரசு, மக்களின் உயிரை துச்சமென மதிப்பதாகவும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காகவே லாக்டவுனை நீக்கிக் கொண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

கொரோனா வைரஸ் காரணமாக, 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் லாக்டவுனை அறிவித்தது மத்திய அரசு. இதைத் தொடர்ந்து, மாநிலங்களின் சூழல்நிலைக் கேற்ப அந்தந்த மாநிலங்கள் லாக்டவுனை நீட்டித்தன. அந்த வகையில், தமிழகத்திலும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால், அத்தியாவசிப் பொருட்கள் தவிர்த்த கடைகள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் உட்பட அனைத்தும் மூடப்பட்டன. கொரோனா வைரஸ் குறையத் தொடங்கியதும் படிப்படியாக லாக்டவுனில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

ஆனால், கொரோனா வைரஸின் 2-வது அலை வீசத் தொடங்கியதும் மீண்டும் லாக்டவுனை அறிவித்து அ.தி.மு.க. அரசு. பின்னர், தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது 2-வது அலை உச்சத்தில் இருந்தது. இதனால், வழக்கம்போல லாக்டவுனை தொடர்ந்தது. கொரோனாவின் 3-வது அலை தொடங்கியதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் முதல் இரவு நேர லாக்டவுனைவும், ஞாயிறு லாக்டவுனையும் அறிவித்தது தி.மு.க. அரசு. தற்போது ஒமிக்ரான் என்கிற கொரோனா வைரஸின் 3-வது அலை உச்சத்தில் இருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில்தான், இரவு நேர மற்றும் ஞாயிறு லாக்டவுனை மொத்தமாக நீக்கி இருக்கிறது தி.மு.க. அரசு. அதாவது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி கடந்த 26-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 28-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி பிப்ரவரி 4-ம் தேதி வரை நடைபெறும் எனவும், பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில்தான், இரவு நேர மற்றும் ஞாயிறு லாக்டவுனை மொத்தமாக நீக்குவதாக தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு கடந்த 27-ம் தேதி அறிவித்திருக்கிறது.

விஷயம் என்னவென்றால், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும், தொடர்ந்து நடந்த விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க. அமோக வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல, நடைபெறவிருக்கும் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலிலும் எளிதாக வெற்றிபெற்று விடலாம் என்பது தி.மு.க.வினரின் எண்ணம். ஆகவே, தி.மு.க.வினர் வாக்கு சேகரிக்க ஏதுவாக லாக்டவுனை தி.மு.க. அரசு நீக்கி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மேலும், ‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மார்ச் 4-ம் தேதி கொரோனா வைரஸ் பரவல் தற்காலிகமாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் கொரோனா பரவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என்றும், ‘அரசு மற்றும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் வேண்டுகோளை ஏற்று மார்ச் 4-ம் தேதி வரை கொரோனா வைரஸ் லீவு எடுத்திருக்கிறது’ என்றும் நெட்டிசன்கள் கிண்டலாக பதிவு செய்து வருகின்றனர்.


Share it if you like it