Share it if you like it
கோவில் சொத்துக்களான தங்க நகைகளை உருக்கி அதனை வங்கியில் டெபாசிட் செய்து அதன் மூலம் வரும் தொகையினை மக்கள் நலன் சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்துவோம் என்று தி.மு.க அரசு அண்மையில் தெரிவித்து இருந்தது. திமுக அரசின் முடிவிற்கு சமூக ஆர்வலர்கள், பக்தர்கள், பல அரசியல் தலைவர்கள், ஆன்மீகவாதிகள், உட்பட பலரும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
பா.ஜ.க, இந்து முன்னணி, இந்து அமைப்புகள் தமிழக அரசு இம்முடிவை உடனே கை விட வேண்டும் என்று போராட்டம், ஆர்ப்பாட்டம், என தொடர் அழுத்தத்தை தமிழக அரசிற்கு தெரிவித்து இருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் நகை உருக்கும் திட்டத்திற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it