நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானத்திற்கு வரவேற்பு தெரிவித்து இருப்பதற்கு நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
ஏழை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு நீட் தேர்வினை நடைமுறைக்கு கொண்டு வந்தது. தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள் நீட் தேர்விற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர்.
ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மற்றும் பணம் படைத்த முதலைகள் நடத்தி வரும் மருத்துவ கல்லூரிக்களுக்கு நீட் தேர்வு பெரும் தடையாக உள்ளது என்பதே யாரும் மறுக்க முடியாத உண்மை. அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு வரபிரசாதம். மருத்துவ மாஃபியாக்களுக்கு அது சாபம் என்பது கல்வியாளர்களின் உறுதியான கருத்து.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்த பொழுது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முதல் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்து இருந்தார். குறிப்பாக, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஒருபடி மேலே சென்று, நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும்.
கொஞ்சமாவது, வெட்கம், மானம், சூடு, சொரணை இருக்க வேண்டும் என்று முந்தைய ஆளும் கட்சியான அ.தி.மு.க-வை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். நீட் தேர்வை ரத்த செய்ய கோரி நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்பி-கள் பதாகையுடன் நாடகம் நடத்திய சம்பவம் அடங்குவதற்குள். சட்டமன்றத்தை கூட்டி நீட் விலக்கு தீர்மானத்தை தி.மு.க அரசு இன்று கொண்டு வந்து உள்ளது. இத்தீர்மானத்திற்கு உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து இருப்பதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.