சொல்லுங்க வீரமணி: தாலி என்றால் பெண் அடிமைத்தனம்; ஹிஜாப் மட்டும் மதஉரிமையா?

சொல்லுங்க வீரமணி: தாலி என்றால் பெண் அடிமைத்தனம்; ஹிஜாப் மட்டும் மதஉரிமையா?

Share it if you like it

ஹிந்துக்கள் புனிதமாக மதிக்கும் தாலியை திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் களங்கப்படுத்திய பொழுது கருத்து கூறிய தமிழக போராளிகள். ஹிஜாபிற்கு மட்டும் கருத்து கூறாமல் கள்ள மெனம் காப்பது ஏன்? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள பிரபல கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளிடையே சீருடை தொடர்பாக தற்பொழுது மிகப் பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வருவது எங்கள் உரிமை என்று இஸ்லாமிய மாணவிகளும். அவர்களுக்கு உள்ள அதே உரிமை எங்களுக்கும் உள்ளது, நாங்களும் காவி நிறத்தில் உடை அணிந்து வருவோம் என ஹிந்து மாண, மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. மேலும், மாணவர்களிடையே மோதல் ஏற்படாமல் இருக்க, அனைவரும் சீரூடையில் மட்டுமே வர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் அறிவுரை வழங்கி இருந்தது. ஆனால் இதற்கு இஸ்லாமிய மாணவிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே இந்த விவகாரம் தற்பொழுது பேசு பொருளாக மாறியுள்ளது.

ஹிஜாப் இஸ்லாமியர்களின் மத உரிமை அதில் தலையிடுவது அவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயல் என்று கூறும் நடுநிலைவாதிகள். ஹிந்துக்கள் புனிதமாக மதிக்கும் தாலியை திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் அறுத்த பொழுது எங்கே? ஒளிந்து கொண்டு இருந்தனர் என மக்கள் கேள்வி எழுப்ப துவங்கியுள்ளனர்.

”தனி மனித உரிமைகள், நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலேயே சீருடை குறித்த அரசின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் படி, கர்நாடக கல்விச் சட்டத்தில் உள்ளதைதான் பள்ளிகளில் பின்பற்றி வருகிறார்கள். அரசின் இந்த உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும். இந்த விவகாரத்தை விட்டுவிட்டுப் படிப்பில் அக்கறை செலுத்த வேண்டும்’ என’ கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவுரை வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாலியறுத்தா பெண்விடுதலை; ஹிஜாப் மட்டும் மத உரிமையா?


Share it if you like it