காங்கிரஸ் தோல்வி; மதுவிற்பனை துறை அமைச்சர் உள்ளடி வேலையா?

காங்கிரஸ் தோல்வி; மதுவிற்பனை துறை அமைச்சர் உள்ளடி வேலையா?

Share it if you like it

கரூர் எம்பி ஜோதிமணி பிரச்சாரம் செய்த இரண்டு காங்கிரஸ் வேட்பாளர்கள் படுதோல்வியை தழுவி இருப்பதன் பின்னணியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உள்ளடி வேலை இருக்குமோ? என்னும் ஐயம் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் முன்பு இடப்பங்கீடு தொடர்பாக தி.மு.க மற்றும் காங்கிரஸ் இடையே கடும் இழுபறி நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண, கரூர் மாவட்ட தி.மு.க அலுவலகத்திற்கு காங்கிரஸ் எம்பி சென்று இருந்தார். ஆனால், தி.மு.க-வினர் ஜோதிமணியை அவமதித்த சம்பவம், தமிழகம் முழுவதும் எதிரொலித்து இருந்தது. ”நான் ஒன்றும் உங்கள் வீட்டுக்கு விருந்து சாப்பிட வரவில்லை, என்று ஆவேசமாக பேசிவிட்டு அவர் வெளியேறிய காணொளியை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். அந்த வகையில், 9, 12, 16 ஆகிய வார்டுகளை காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க ஒதுக்கியது. அதில், 9வது வார்டில் ஸ்டீபன் பாபு, 12-வது வார்டில் கிருத்திகா, 16-வது வார்டில் நகர தலைவர் பெரியசாமியும் போட்டியிட்டனர். இதில் 12, 16 ஆகிய வார்டுகளில் மட்டுமே ஜோதிமணி பிரசாரத்தை மேற்கொண்டார். ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிக நெருக்கமான 9-வது வார்டு வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யாமல் அவரை புறக்கணித்தார் ஜோதிமணி. இந்த நிலையில், நேற்றைய தினம் வெளியான தேர்தல் முடிவில் ஸ்டீபன் பாபு மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். மற்ற இரு காங்கிரஸ் வேட்பாளர்களும் தோல்வியை தழுவியுள்ளனர். இதன் பின்னணியில் நிச்சயம் செந்தில் பாலாஜியின் உள்ளடி வேலை இருக்கும் என அரசியல் பார்வையாளர்களும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it