பாரத பிரதமரிடம் சரண்டரான ஸ்டாலின்!

பாரத பிரதமரிடம் சரண்டரான ஸ்டாலின்!

Share it if you like it

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை எங்களால், மட்டுமே மீட்க முடியும் என்று கூறிவந்தார் முதல்வர் ஸ்டாலின். அந்தவகையில், இன்று தனது தோல்வியை ஒப்புக் கொண்டு மத்திய அரசிடம் சரண்டராகி இருப்பதற்கு நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

உக்ரை- ரஷ்யா இடையில் போர் உச்சக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மூன்றாவது உலக போர் தொடங்கி விடுமோ என்னும் ஐயம் மற்ற நாடுகளிடையே கடும் அச்சத்தையும், பயத்தையும் உருவாக்கியுள்ளது. அந்த வகையில், உக்ரைனில் சிக்கியுள்ள தனது நாட்டு குடிமக்களை மீட்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை விரைவுப்படுத்தியுள்ள காரணத்தில், பலர் தாயகம் திரும்பும் சூழல் தற்பொழுது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாணவர்களின் பெற்றோர்கள் மோடி தலைமையிலான அரசிற்கு தங்களது, நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசுக்கு நற்பெயர் கிடைத்து வருவதை தடுக்கும் விதமாக, தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், வழக்கம் போல மக்களின் கவனத்தை திசை திருப்பும் பணியில் மாநில அரசு ஈடுபட்டு வந்தது. எவ்வளவு செலவு ஆனாலும் சரி மாணவர்களை மீட்க வேண்டும், நான்கு நாடுகள் வழியாக மாணவர்களை மீட்க தமிழக அரசு தீவிரம், என்று தி.மு.க-வின் ஊடகங்களும் அதன் ஆசிபெற்ற ஊடகங்களும் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தது. இந்த நிலையில் தான், மத்திய அரசு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கும் தமிழக அரசு தொடர்ந்து கடிதம் எழுதி வருவதன் வாயிலாக, உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை, மத்திய அரசால் மட்டுமே மீட்க முடியும் என்பதை ஸ்டாலின் அரசு தற்பொழுது நன்கு உணர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it