இதாங்க தி.மு.க.வோட லட்சணம்!

இதாங்க தி.மு.க.வோட லட்சணம்!

Share it if you like it

நேற்று நடந்த உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது பெண் போலீஸ் அதிகாரியை தி.மு.க. மாவட்டச் செயலாளர் மிரட்டிய சம்பவம் தமிழக காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், சட்டம், ஒழுங்கு பாதுகாப்பை உறுதி செய்வேன். யார் தவறு செய்தாலும், அவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பேன். எனது கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்கூட அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று தேர்தல் சமயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். அதேசமயம், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினோ, எங்கள் ஆட்சிக்கு இன்னும் 5 மாதங்கள்தான் இருக்கிறது. நாங்கள் பார்க்காத காவல்துறையா? என்று பகீர் மிரட்டல் விடுத்தார்.

இந்த நிலையில், தி.மு.க. ஆட்சிக்கும் வந்துவிட்டது. இதன் பிறகு, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதை தமிழக மக்கள் வேதனையுடன் பார்த்து வருகிறார்கள். இதையடுத்து, தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் கட்டுபாட்டில் இல்லை. மக்களுக்கு போதிய பாதுகாப்பை தமிழக அரசால் வழங்க முடியவில்லை என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தி.மு.க. அரசு மீது கடுமையான குற்றச்சாட்டை சுமத்தி இருந்தார். இதனை மெய்ப்பிக்கும் விதமாக பொதுமக்கள் மட்டுமில்லாமல், காவல்துறையினருக்கும் உரிய மரியாதை கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மூத்த தலைவர் வன்னியரசு, வி.சி.க. கொடி எங்கெங்கு ஏற்றப்படுகிறதோ, அதை கண்டறிந்து தடுப்பதற்கு தமிழ்நாடு காவல்துறையில் தனி அணி எதுவும் போடப்பட்டுள்ளதா? இதே வேலையாகத் திரிகிறார்கள். விடுதலைச் சிறுத்தைகளின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்று காவல்துறைக்கு பகிரங்க மிரட்டல் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது, தென்காசி தி.மு.க. மாவட்டச் செயலாளர், பெண் போலீஸ் உயர் அதிகாரி ஒருவரை நேருக்கு நேராக மிரட்டும் சம்பவம் அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it