பெட்ரோலை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் திருமுருகன் காந்தி.
மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் குறித்து ஏதேனும் ஒரு பொய்யை மக்களிடம் பரப்பி அதன் மூலம் தன்னை ஒரு ஹீரோவாக காட்டி கொள்பவர் திருமுருகன் காந்தி. ஏழை, எளியவர்கள், பட்டினியில் சாக போகிறார்கள், இனிமேல் ரேஷன் பொருட்கள் மக்களுக்கு கிடைக்காது, ரேஷன் கடைகளே, இருக்காது என மிகப் பெரிய கப்சா கதையை மக்களிடம் கூறியவர் இந்த தி.மு.க-வின் தீவிர ஆதரவாளர் என்பதில் யாருக்கும் மறு கருத்து இருக்க முடியாது.
படுதோல்வியடைந்த தி.மு.க அரசின் மீது மக்களுக்கு உள்ள கோவத்தை திசை திருப்பும் விதமாக, பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு அனுமதி கொடுத்தால். மாநில அரசு குறைக்கும் என திருமுருகன் பேசிய உள்ள காணொளி தற்பொழுது வைரலாகி வருகிறது. பெட்ரோல் விலையை குறைப்போம், GST-க்குள் பெட்ரோலை, கொண்டு வர பாடுவோம் என்று பேசிய தி.மு.க தலைமையை இது வரை இந்த சில்லறை போராளி ஏன்? கேள்வி கேட்கவில்லை என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அயல் நாடுகளில் இருந்து கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்வோம், என்று பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வரை அமைதியாக இருந்து வரும் நிலையில். திருமுருகன் காந்தி இவ்வாறு எல்லாம் தி.மு.க-விற்கு முட்டு கொடுக்கும் விதமாக பேசி வருவது கடும் கண்டனத்திற்குறியது என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.