துணை முதல்வர் பதவி மீது எனக்கு ஆசை இல்லை உதயநிதி ஸ்டாலின் கருத்து.
தி.மு.க ஒன்னும் சங்கர மடம் அல்ல இது ஜனநாயக கட்சி என்று கூறியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர், அதனை தொடர்ந்து எனக்கு பிறகு எனது மகனோ, மருமகனோ, நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று கலைஞர் கூறிய அதே வசனத்தை தமிழக மக்களிடம் கூறியவர் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் தற்பொழுதையே தமிழக முதல்வருமான ஸ்டாலின்.
கட்சிக்காக கடுமையாக உழைத்த பல மூத்த தலைவர்களை அரசியலில் இருந்து ஓரம் கட்டி விட்டு திருவல்லிகேணி-சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உதயநிதிக்கு ஸ்டாலினுக்கு எம்எல்ஏ சீட் வழங்கப்பட்டதாக கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட பல முன்னி தலைவர்கள் புலம்பியதை அனைவரும் அறிவர்.
தி.மு.க பொதுச் செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அவர்கள்., தமிழக முதல்வர் ஸ்டாலினை காட்டிலும் மிக மூத்த தலைவர் அவருக்கு சாதாரண துறையை ஒதுக்கி விட்டு, கட்சியில் நேற்று இணைந்த உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியை கொடுக்க வேண்டும் என்று சில அமைச்சர்ளை விட்டு கூறுவது நியாயமா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். தி.மு.க-வில் எனக்கு எந்த பொறுப்பும், பதவியும், வேண்டாம் என்றால் அது தான் எனக்கு வேண்டும் என்பது தானே அர்த்தம். அக்கட்சியின் STD எங்களுக்கு தெரியாதா? என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.