விளையாட்டுத்துறை அமைச்சர் மகனின் விளையாட்டு… வைரலாகும் போட்டோ: தி.மு.க.வினரின் கைவரிசையா?!

விளையாட்டுத்துறை அமைச்சர் மகனின் விளையாட்டு… வைரலாகும் போட்டோ: தி.மு.க.வினரின் கைவரிசையா?!

Share it if you like it

தமிழக முதல்வர் ஸ்டாலின் பேரனும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின்  மகனுமான இன்பநிதி, வெளிநாட்டில் பெண் தோழியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது தி.மு.க. சீனியர்களின் கைவரிசையாக இருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது. அதேசமயம், இப்புகைப்படத்திற்கு ஆதரவாக இன்பநிதியின் தாய் கிருத்திகா வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில் அன்பு செய்யவும், வெளிப்படுதவும் அச்சப்படாதே என்று கூறியிருக்கிறார்.

தமிழக முதல்வர் ஸ்டாலினின் பேரனும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதி. இவர் ஒரு கால்பந்து விளையாட்டு வீரர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் நடந்த கால்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்தார். அப்போது அவரை, முதல்வர் ஸ்டாலின் விமான நிலையத்துக்கே சென்று வழியனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், சமீபத்தில் உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இது தி.மு.க.வில் இருக்கும் மூத்த தலைவர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், உதயநிதிக்கு ஆதரவாக பேசி வந்தனர். குறிப்பாக, அமைச்சர் நேரு உதயநிதி மட்டுமல்ல அவரது மகன் இன்பநிதி வந்தாலும் வாழ்க கோஷ்ம் போடுவோம் என்று கூறி கலகலப்பை ஏற்படுத்தியதோடு, தனது விசுவாசத்தையும் காட்டினார்.

இந்த நிலையில்தான், உதயநிதியின் மகன் இன்பநிதி வெளிநாட்டில் ஒரு இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அப்பெண், அவரது தோழியா அல்லது மாடல் அழகியா என்பது தெரியவில்லை. இந்த புகைப்படம்தான் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஐ.டி. விங் நிர்வாகிகள் மேற்கண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருவதோடு, கடுமையாக விமர்சனமும் செய்து வருகின்றனர். அதேசமயம், தனது மகனுக்கு ஆதரவாகவும், அப்புகைப்படத்திற்கு பதிலளிக்கும் வகையிலும், இன்பநிதியின் தாயார் கிருத்திகா உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அப்பதிவில், “அன்பு செய்யவும் , வெளிப்படுதவும் அச்சப்படாதே. இயற்கையை அதன் முழுத் தன்மையில் புரிந்து கொள்ள இது ஒரு வழியாகும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Image


Share it if you like it