தி.மு.க.வின் ஹிந்தி எதிர்ப்பு: டார்டாராக கிழித்து தொங்க விட்ட பிச்சைக்காரர்!

தி.மு.க.வின் ஹிந்தி எதிர்ப்பு: டார்டாராக கிழித்து தொங்க விட்ட பிச்சைக்காரர்!

Share it if you like it

தி.மு.க.வின் கொள்கையான ஹிந்தி எதிர்ப்பு, நீட் தேர்வு ரத்து, டாஸ்மாக் மூடல் ஆகியவற்றை டார்டாராக கிழித்து தொங்கி விட்டிருக்கிறார் பிச்சைக்காரர் ஒருவர். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திடீரென ரோட்டின் குறுக்கே சென்ற பிச்சைக்காரர் ஒருவரை, காரில் சென்ற ஹைகிளாஸ் நபர் ஒருவர், போடா ஃபூல் என்று ஆங்கிலத்தில் திட்டிவிட்டுச் சென்றார். பதிலுக்கு அந்த பிச்சைக்காரரும் அந்த நபரை பார்த்து யார்ரா ஃபூல் என்றபடியே ஆங்கிலத்தில் திட்டத் தொடங்கினார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அந்த பிச்சைக்காரரிடம் ஒரு தனியார் செய்திச் சேனல் ஒன்று பேட்டி எடுத்திருக்கிறது. அப்பேட்டியில்தான், தி.மு.க.வை டார்டாராக கிழித்து தொங்க விட்டிருக்கிறார் அந்த ‘படித்த’ பிச்சைக்காரர். இந்த பிச்சைக்காரர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவில்லை. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பதும் தெரியவில்லை.

அந்த வீடியோவில் அந்த பிச்சைக்காரர் சொல்லி இருப்பது இதுதான். “நான் கேட்குற கேள்விக்கு நீட்டை எதிர்க்கிறவங்களால பதில் சொல்ல முடியுமா? தனியார் ஸ்கூல்ல படிக்கிற பசங்க ஈசியா நீட் தேர்வை பாஸ் பண்ணிட்டு போயிடுறாங்க. ஆனா, அரசுப் பள்ளி மாணவர்களால பாஸ் பண்ண முடியலன்னு சொல்றாங்க. அப்ப தப்பு யாரு மேல இருக்கு. தமிழ்நாட்டுல இருக்குற அரசுப் பள்ளிகள்ல தரமான கல்வி இருக்கா மொதல்ல. தனியார் பள்ளியில இருக்குற சென்ட்ரல் போர்டு சிலபஸ அரசுப் பள்ளிக்கு கொண்டுவந்து நீங்க ஏன் அரசுப் பள்ளியின் கல்வித் தரத்தை உயர்த்தவில்லை என்பது எனது முதல் கேள்வி. அடுத்ததாக, நவோதயான்னு ஒரு அருமையான பள்ளிக்கூட திட்டத்தை 30 வருஷத்து முன்னாடி ராஜிவ்காந்தி குடுத்தாரு. 6-வதில இருந்து 12-ம் வகுப்பு வரைக்கும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு இலவசமா சென்ட்ரல் போர்டு சிலபஸ். இது இந்தியாவுல எல்லா மாநிலத்திலயும் 600 பள்ளிக்கூடம் இருக்கு. பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரில கூட 4 பள்ளிக்கூடம் இருக்குது. ஆனா, தமிழ்நாட்டுல ஒரு பள்ளிக்கூடம் கூட இல்லை. தமிழ்நாட்டுலயும் நவோதயா பள்ளிகள கொண்டுவரணும்னு ஐகோர்ட் ஆர்டர் போட்டும், இன்னும் கொண்டு வரல.

இதுக்கு என்ன காரணம். ஹிந்தி இருக்குங்கிற ஒரே காரணம்தான். ஹிந்தி இருந்தா என்னங்குறேன். நீங்க மும்பையிலயே போயி இருந்தாலும் நம்ம தாய்மொழியை நாம மறக்கப் போறதில்லையே. இவங்க சொல்லித்தான் நாம தமிழை மறக்காம இருக்கணும்னு ஒன்னும் அவசியம் இல்லையே. ஹிந்தியை திணிக்கிறாங்கன்னு சொல்றாங்க. திணிக்கிறதுன்னா என்ன அர்த்தம். இதுக்கு பேரு மெட்ரோ. இதை ஹிந்திலதான் வைக்கணும்னு சொன்னா அது ஹிந்தியை திணிக்கிறதுன்னு அர்த்தம். ஒரு சப்ஜெக்டா வச்சுக்கோங்கன்னு சொல்றதுல தப்பே இல்லையே. இன்னிக்கு கேரளாவுல 2-வது முறையா முதலமைச்சரா வந்திருக்கிற பிணராயி விஜயன் என்ன உத்தரவு போட்டிருக்காரு தெரியுமா? 6-வது முதல் 12-ம் வகுப்புவரை கண்டிப்பாக ஹிந்தியை வாசிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதுக்காக அவருக்கு மலையாளம் பிடிக்கலைன்னு சொல்ல முடியுமா அல்லது தாய்மொழி மேல அக்கறை இல்லன்னு சொல்ல முடியுமா?

இங்க இருக்குற அரசியல்வாதிகளோட எண்ணம் என்னன்னா, இங்க இருக்குற இளைஞர்கள் படித்து முன்னேறி தமிழ்நாட்டை விட்டு வெளியில எங்கயும் போயிடக்கூடாது. நாலு விஷயம் தெரிஞ்சுக்கிட்டமுன்னா நம்ம அவங்கள எதிர்த்து கேள்வி கேட்க ஆரம்பிச்சுடுவோம். அதான் காரணம். அதனால்தான், டாஸ்மாக்கை கொண்டுவந்து இளைஞர்களை அழிச்சுக்கிட்டு இருக்காங்க. இன்னொரு விஷயத்தை நான் தைரியமா சொல்றேன். நாளைக்கு என்னைய யாராவது அடிச்சாலும் பரவாயில்லை. புழுதிவாக்கம் பக்கத்துல சன்சைன் மெட்ரிக்குலேசன் ஸ்கூல் இருக்கு தெரியுமா? அது யாரோடது? முதலமைச்சர் ஸ்டாலின் இருக்காரே, அவரோட மருமகன் சபரீசனோடது. அங்க உள்ள போனா நீங்க இங்கிலீசுலதான் பேச முடியும். தமிழ்ல பேச முடியாது. இதை அவரால் கேட்க முடியுமா? கேட்டா எனக்கும் அந்த ஸ்கூலுக்கும் சம்பந்தம் இல்லேம்பாரு. அப்ப இத என்ன சொல்றது. உனக்கொரு சட்டம், மத்தவங்களுக்கு ஒரு சட்டமா? நான் அரசாங்கத்துக்கு என்ன சொல்றேன்னா, நீங்க எவ்வளவு வேணா கொள்ளையடிச்சுக்கோங்க. தயவு செய்து மாணவர்களோட லைப்ல விளையாடாதீங்க” என்று நிறைவு செய்கிறார்.

இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து விட்டு பலரும், ஒரு பிச்சைக்காரருக்கு இருக்கும் அறிவுகூட, தி.மு.க.காரங்களுக்கு இல்லையே என்று வசைபாடி வருகின்றனர்.


Share it if you like it