‘ஸ்டிக்கர் தி.மு.க.’: விளாசும் நெட்டிசன்கள்!

‘ஸ்டிக்கர் தி.மு.க.’: விளாசும் நெட்டிசன்கள்!

Share it if you like it

மத்திய அரசின் திட்டத்தை தாங்கள் கொண்டுவந்த திட்டம் போல, தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு தெரிவித்து வருவதால், ஸ்டிக்கர் தி.மு.க. என்று வெளுத்து வாங்கி வருகின்றனர் எதிர்க்கட்சியினரும், நெட்டிசன்களும்.

பொதுவாகவே, பொங்கல் பரிசு முதல் வெள்ள நிவாரணம் வரை எந்த உதவி வழங்கினாலும், அதில் தங்களது கட்சியின் முத்திரையையும், கட்சித் தலைவர்களின் போட்டோவையும் அச்சிடுவது தி.மு.க.வுக்கு கைவந்த கலை. அதேபோல, மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை எல்லாம் தாங்கள் கொண்டுவந்ததுபோல, பறைசாற்றிக் கொள்வது தி.மு.க.வினரின் வழக்கம். இதனால், தி.மு.க.வை ஸ்டிக்கர் தி.மு.க. என்று எதிர்க்கட்சியினரும், நெட்டிசன்களும் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.

அந்தவகையில், 2020-ம் ஆண்டு இந்தியாவில் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பர்னிச்சர் பூங்கா அமைக்க மத்திய அரசு ஏற்பாடு செய்தது. இதற்கு அப்போதைய அ.தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு, தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டையில் பர்னிச்சர் பார்க் அமைக்க இசைவு தெரிவித்தது. இதையடுத்து, சிப்காட் நிறுவன வளாகத்தில் 1,156 ஏக்கர் பரப்பளவு ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பர்னிச்சர் பார்க் அமைப்பதற்கான பணிகள் நடந்து வந்தன. ஆனால், திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவதற்குள் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, 2021-ல் தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட்டது.

இதன் பிறகு, இத்திட்டத்தை தங்களது தலைமையிலான அரசு கொண்டு வந்ததுபோல, தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 1,000 கோடி ரூபாயில் பர்னிச்சர் பார்க் அமைக்கப்படும் என்று முதல்வரும், தி.மு.க. தலைவருமான ஸ்டாலின் கடந்தாண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவித்தார். அதன்படி, சர்வதேச பர்னிச்சர் பூங்காவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டி இருக்கிறார். இவ்விழாவில் பேசிய ஸ்டாலின், இத்திட்டம் முழுக்க முழுக்க தனது அரசால் கொண்டுவரப்பட்டதுபோல கூறியிருக்கிறார். இதற்குத்தான் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. 2020-ம் ஆண்டு மத்திய அரசின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட திட்டத்துக்கு, தி.மு.க.வினர் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று நெட்டிசன்களும், எதிர்க்கட்சியினரும் கிண்டலடித்து வருகின்றனர்.


Share it if you like it