உதயநிதிக்கு அமைச்சர் பதவி: தி.மு.க. சட்ட விதிகளுக்கு எதிரானதாமே?!

உதயநிதிக்கு அமைச்சர் பதவி: தி.மு.க. சட்ட விதிகளுக்கு எதிரானதாமே?!

Share it if you like it

உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்தது, தி.மு.க. சட்ட விதிகளுக்கு எதிரானது என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக, கேரள மாநில தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க.வைப் பொறுத்தவரை, எந்தவொரு விஷயமும் ஊருக்குத்தான் உபதேசம் என்பதுபோலதான் இருக்கும். சமூகநீதி பற்றி தி.மு.க.வினர் வாய்கிழிய மேடைகளில் பேசுவார்கள். ஆனால், அதே மேடையில் ஒருவரின் ஜாதியைப் பற்றிப் பேசி, அந்த சமூகநீதிக்கே சவால் விடுவார்கள். அதேபோல, தி.மு.க. ஒரு சுயமரியாதை இயக்கம். யாருக்கும் தலைவணங்க மாட்டோம் என்பார்கள். உதாரணமாக, அதிமுகவினர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா காலில் விழும்போது நக்கல் அடிப்பார்கள். ஆனால், தன்னைவிட வயதில் குறைந்தவரானவர் தலைவரின் மகனாக இருந்தால் போதும், அவரது காலிலும் விழுவார்கள், அவரது மனைவி காலிலும் விழுந்து அந்த சுயமரியாதை என்ன விலை என்று கேட்பார்கள். அதுமட்டுமா, பெண்ணுரிமை பற்றி நா கூசாமல் பேசுவார்கள். அதே மேடையில் பெண்ணின் இடுப்பைக் கிள்ளி, பெண்ணுரிமையை பறிப்பார்கள். குறிப்பாக, லியோனி போன்றவர்கள் பெண்களின் இடுப்பு பற்றி பாடமே எடுத்து, பெண்ணுரிமையை களங்கப்படுத்துவார்கள். அந்த வகையில், தற்போது தாங்கள் வகுத்த சட்ட திட்டங்களை மீறி இருக்கிறார்கள் என்பதுதான் விஷயமே…

அதாவது, ஈரோடு வெங்கட ராமசாமியின் திராவிடர் கழக கொள்கைகள், கோட்பாடுகள், சிந்தனைகள், சித்தாந்தங்கள், செயல்பாடுகள் பிடிக்காமல், அந்த அமைப்பிலிருந்து வெளியேறி திராவிடர் முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) என்கிற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியவர் அண்ணாதுரை. இப்படி புதிய கட்சியை அண்ணாதுரை தொடங்கியபோது, தி.மு.க.வுக்கென சில சட்ட திட்டங்களையும், விதிமுறைகளையும் வகுத்தார். ஆனால், அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு, தலைவரான கருணாநிதி தி.மு.க. சட்ட திட்டங்கள், விதிமுறைகள் எதையுமே கடைப்பிடிக்கவில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். குறிப்பாக, கட்சி நிர்வாகிகளிடம் சட்ட விதிமுறைகளை சுட்டிக்காட்டிப் பேசும் கருணாநிதி, தனது குடும்ப உறுப்பினர்கள் விஷயத்தில் மட்டும் சட்ட விதிமுறைகளை கண்டுகொள்வதில்லை என்கிறார்கள்.

இந்த நிலையில்தான், தற்போது தமிழக முதல்வராக இருக்கும் ஸ்டாலினும், தனது குடும்ப உறுப்பினர்கள் விஷயத்தில் மட்டும் தி.மு.க.வின் சட்ட விதிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதாவது, அண்ணாதுரையால் வகுக்கப்பட்ட சட்ட விதிமுறைகளில் முக்கியமானது அமைச்சர் பதவி வழங்குவது பற்றியது. அந்த விதிமுறை என்ன சொல்கிறது என்றால், தி.மு.க. ஆட்சி அமைக்கும்போது, கட்சியில் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்களுக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்பதுதான். ஆனால், வழக்கம்போல தி.மு.க. தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், தி.மு.க.வின் சட்ட திட்டங்களையும், விதிமுறைகளையும் மீறி, முதல்முறையாக எம்.எல்.ஏ.வான தனது மகன் உதயநிதிக்கு, அமைச்சர் பதவி கொடுத்து பட்டாபிஷேகம் செய்திருக்கிறார்.

இந்த விவகாரம்தான் தற்போது தி.மு.க.வுக்குள் புகைச்சலை கிளப்பி இருக்கிறது. வெளியில் பேசும்போது, நாங்கள் உதயநிதி மட்டுமல்ல, அவரது மகன் வந்தாலும் வாழ்க கோஷம் போடுவோம் என்று சொன்னாலும், உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்களாம் சில சீனியர் அமைச்சர்கள். இவர்கள் தங்களது ஆற்றாமையை வெளிப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதைப் பற்றி வெளியிலோ, மீடியாவிலோ சொன்னால் நமது அமைச்சர் பதவிக்கு ஆபத்து வந்து விடுமே என்பதுதான் அவர்களின் கவலை. இந்த சூழலில்தான், நம்ம ஊரு மீடியாக்களுக்கு சொன்னால்தானே, நம்ம பதவிக்கு ஆபத்து வரும் என்று கருதி, அண்டை மாநிலமான கேரளாவில் இயங்கி வரும் ஒரு செய்திச் சேனலுக்கு தகவலை கொடுத்திருக்கிறார்கள். இது சமயம் என்று கருதி, அந்த சேனலும் தி.மு.க.வின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி வருகிறது. இதைப் பார்த்த பலரும், தமிழ்நாட்டிலுள்ள தங்களது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி இருக்கிறார்கள். தற்போது இந்த செய்தி வீடியோ காட்சிதான் தமிழகத்திலுள்ள சமூக வலைத்தளங்களில் பரவி, வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த தி.மு.க.வினர் லபோதிபோ என்று வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.


Share it if you like it