தி.மு.க. எம்.எல்.ஏ.வின் ‘ஆபாச லைக்ஸ்’: ஏய், அவனா நீ? கலாய்க்கும் நெட்டிசன்கள்!

தி.மு.க. எம்.எல்.ஏ.வின் ‘ஆபாச லைக்ஸ்’: ஏய், அவனா நீ? கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Share it if you like it

தி.மு.க. எம்.எல்.ஏ.வின் ஆபாச லைக்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் சந்தி சிரித்து வருகின்றன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த ஏ.ஜெ.மணிக்கண்ணன். அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பருமான குமரகுருவை எதிர்த்து வெற்றிபெற்றவர். இதனால், தி.மு.க.வில் இவருக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. அதேபோல, தொகுதி மக்களிடமும் நல்ல செல்வாக்கு இருந்தது. ஆனால், இந்த மரியாதையையும், செல்வாக்கையும் ஒரே நாளில் சீர்குலைத்து விட்டிருக்கிறார் மணிக்கண்ணன்.

அதாவது, தி.மு.க. எம்.எல்.ஏ. மணிக்கண்ணன், சமூக வலைத்தளங்களில் பொழுதுபோக்குவதில் மிகவும் ஆர்வமுடையவர் என்கிறார்கள். அதிலும் குறிப்பாக, இணையதளங்களில் வரும் ஆபாச வீடியோக்களைத்தான் அதிகம் பார்ப்பாராம். இப்படி பார்த்த வீடியோக்களுக்கு லைக்கும் போட்டு வைத்திருக்கிறார். இதுதான் தற்போது வில்லங்கமாகி இருக்கிறது. இவர், லைக் போட்ட ஆபாச வீடியோக்கள் அனைத்தையும் யாரோ தோண்டித் துருவி எடுத்து அதே இணையத்தில் அம்பலப்படுத்தி விட்டார்கள். இதனால், இணையதளமே சந்தி சிரிக்கிறது.

இதைப் பார்த்த பலரும், தி.மு.க.வுக்கு வாக்களித்த கள்ளக்குறிச்சி மக்களே… யாரும் உங்கள் தொகுதி எம்.எல்.ஏ. மணிக்கண்ணனின் சமூக வலைத்தளப் பக்கங்களை திறந்து பார்த்து விட வேண்டாம். எல்லாம் 18+ காட்சிகளாக இருக்கிறது என்றும், ஆபாச வீடியோக்களுக்கு லைக்ஸ் போட்டு வைத்திருக்கும் இவர்தான், தொகுதி மக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளப் போகிறார் என்றும், இதுதான் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் மக்கள் சேவை போல என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தற்போது தி.மு.க. அமைச்சராக இருக்கும் பெரியகருப்பன், கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு பேன் பார்த்ததை யாரும் மறந்திருக்க முடியாது. தற்போது தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் ஆபாச காணொளிகளுக்கு லைக் போட்டு வைத்திருக்கிறார். இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ? என்பதுதான் பொதுமக்களின் கேள்வியாக இருக்கிறது.


Share it if you like it