சென்னை மைலாப்பூரில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு திமுக வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியன் பிரச்சார வாகனத்தில் சென்றார். அப்போது மக்கள் சிலர் அவருக்கு ஆரத்தி எடுத்தனர். அதன் பிறகு மக்கள் சூழ்ந்து சரமாரியாக தமிழச்சி தங்கபாண்டியனை பார்த்து கேள்வி எழுப்பினர்.
குடிசை மாற்று வாரியம் கட்டி கொடுத்த வீட்டை 50 ஆண்டுகள் ஆகியும் சீரமைத்து தரவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதற்கு முன்னர் அமைச்சர் தமிழச்சி தங்கபாண்டியன் எப்போது உங்கள் பகுதிக்கு வந்தார் என்ற செய்தியாளரின் கேள்விக்கு, 5 வருடத்திற்கு முன்னால் தேர்தலுக்காக வந்தார். அதில் வெற்றி பெற்று தற்போது மீண்டும் தேர்தல் வருவதால் இப்போது ஒட்டு கேட்க வந்துள்ளார் என்று கூறினார்.
தேர்தல் வரும்போது மட்டும் தான் மக்களின் நியாபகம் வருகிறதா என்று ஆவேசப்பட்ட மக்கள் தமிழச்சி தங்கபாண்டியனிடம் “நீங்க போய்ட்டு அடுத்த எலக்சனுக்கு வாங்க.. அப்போ நாங்க எல்லாம் உயிரோட இருந்தா உங்களுக்கு ஒட்டு போடுறோம்” என்று மிகவும் கோபமாக கூறினர். இதனால் மக்களுக்கு என்ன பதில் வேண்டும் என தெரியாமல் விழிபிதுங்கி என்ன செய்வதென்றே தெரியாமல் திருதிருவென முழித்தார் திமுகவின் அழகு வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன். இனிமேலும் இங்கிருந்தால் இருக்கிற கொஞ்ச நஞ்ச மரியாதையும் வாங்கிவிடுவார்கள் என பயந்து டிரைவரிடம் பிரச்சார வாகனத்தை ரிவர்ஸ் எடுக்க சொல்லி அங்கிருந்து புறப்பட்டு சென்றார் தமிழச்சி தங்கப்பாண்டியன்.
இவங்க சுயநலத்துக்கு மட்டும் வராங்க . யாரு வாழ்ந்தா என்ன செத்தா என்ன அவங்களுக்கு என்ன கெடக்குது..அவங்களுக்கு என்ன ஏசி வீட்டுல சோத்துல நெய் ஊத்தி சாப்டுட்டு ஜாலியா இருப்பாங்க…ஏழைங்க நாங்க வாயில வயித்துல அடிச்சே சாகனும்…இவ்வாறு அப்பகுதி மக்கள் கண்ணீர் வராத குறையாய் புலம்பி தீர்த்தனர்.