திராவிடியா… தேசிடியா… அப்துல்லாவின் அநாகரிக பதிவு: நீங்களெல்லாம் எம்.பி.யா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

திராவிடியா… தேசிடியா… அப்துல்லாவின் அநாகரிக பதிவு: நீங்களெல்லாம் எம்.பி.யா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Share it if you like it

தி.மு.க. எம்.பி. அப்துல்லாவின் அநாகரிக பதிவு பொதுமக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. அதேசமயம், நீங்கள்லாம் எம்.பி.யா? என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

புதுக்கோட்டை தொகுதி எம்.பி.யாக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா. இவர், நேற்று இரவு 9.15 மணியளவில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அப்பதிவில், “எந்த சங்கியாவது திராவிடியானு சொன்னா பதிலுக்கு தேசிடியானு சொல்லுங்க. அவன் நல்ல அர்த்தத்தில் சொன்னா, நம்ம சொல்றதும் நல்ல அர்த்தம் ஆகட்டும். அவன் கெட்ட அர்த்தத்தில் சொன்னா, நம்ம சொல்றதும் கெட்ட அர்த்தம் ஆகட்டும்” என்று கூறியிருப்பதோடு, தேசிடியா என்ற ஹேஷ்டேக்கையும் போட்டிருக்கிறார். இதில், வேடிக்கை என்னவென்றால், தமிழ் மொழிக்கு முட்டுக் கொடுக்கும் திராவிட அரசியல்வாதியான அப்துல்லாவின் பதிவில், தமிழ் தப்பும் தவறுமாக இருப்பதுதான். அப்துல்லாவின் இந்த ட்வீட்தான் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பி இருக்கிறது.

காரணம், ஒரு சாதாரண மனிதன் பதிவு போடுவதற்கும், ஒரு மக்கள் பிரதிநிதி பதிவு போடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஒரு சாமானியன் எப்படி வேண்டுமானாலும் பதிவு போடலாம். ஏனெனில், அவனுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. அதேசமயம், ஒரு மக்கள் பிரதிநிதி என்பவர், அனைவருக்கும் பொதுவானவனாக இருப்பேன் என்று சத்தியப்பிரமாணம் எடுத்தவர்கள். ஆகவே, எம்.எல்.ஏ.வாக இருந்தாலும், எம்.பி.யாக இருந்தாலும், சாதாரண வார்டு கவுன்சிலராக இருந்தாலும் மக்கள் பிரதிநிதி என்று வந்துவிட்டால், அவர் அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும் என்பதுதான் நியதி.

அப்படி இருக்க, அப்துல்லா ஒரு எம்.பி.யாக இருந்து கொண்டு இப்படியொரு பதிவை போட்டிருப்பதுதான் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருப்பதோடு, பெரும் விவாதத்துக்கும் உள்ளாகி இருக்கிறது. அப்துல்லாவின் இந்த பதிவுக்கு ஏராளமானோர் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றனர். அதேசமயம், நெட்டிசன்கள் நீயெல்லாம் ஒரு எம்.பி.யா? உனக்கெல்லாம் மக்கள் பிரதிநிதியாக இருக்க தகுதியே இல்லை. பதவியை ராஜினாமா செய்துவிடு என்று வறுத்தெடுத்து வருகின்றனர். இன்னும் சிலரோ, ஸ்டாலினை நிம்மதியா தூங்கவிட மாட்டானுங்க போல என்று கருத்து தெரிவித்திருக்கிறார். மேலும், ஒரு மக்கள் பிரதிநிதி இப்படியொரு பதிவை போட்டிருப்பது பொதுவெளியில் பெரும் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதன் மூலம் அப்துல்லாவும் தனது பங்குக்கு ஸ்டாலினின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார்.


Share it if you like it