மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது மகன் துரை வையாபுரிக்கு கட்சியில் மிக முக்கிய பொறுப்பினை வழங்கியுள்ளார்.
தி.மு.க முன்னாள் தலைவர் கலைஞருக்கு இணையாக இருந்த பல முன்னணி தலைவர்களில் வைகோவும் ஒருவர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. வைகோ-வின் அசுர வளர்ச்சி எங்கு தனது மகன் ஸ்டாலினுக்கு பெரும் தடையாக மாறி விடுமோ என்கின்ற அச்சம் காரணமாக கலைஞர் அவர்கள் வைகோ மீது வீண் பழி சுமத்தி தி.மு.க-வை விட்டு நீக்கியதாக இன்று வரை தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
கலைஞர் அவர்களிடம் கோபித்து கொண்டு புது கட்சியை (மதிமுக) தொடங்கிய வைகோ, திமுக-வில் உள்ள வாரிசு அரசியல் குறித்தும் அக்கட்சியில் நிகழும் அட்டூழியங்கள், அடாவடிகள், குறித்தும் தொடர்ந்து மேடை தோறும் பேசி வந்த நிலையில். ம.தி.மு.க பொதுச் செயலாளராக உள்ள வைகோ அவர்கள் தனது மகன் துரை வையாபுரிக்கு கட்சியின் தலைமைக் கழகச் செயலாளர் பதவி வழங்கியுள்ளார்.
அதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த வைகோ, அவர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதில் அளித்த பின்பு, இது வாரிசு அரசியல் கிடையாது எனது கட்சி தொண்டர்கள் விரும்பினார்கள். அதனால் துரை வையாபுரிக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டதாக வைகோ பேசிய காணொலி சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது.
மதிமுக-விற்காக தங்களது வாழ்வையே தொலைத்த பல முன்னணி தலைவர்கள் உள்ள நிலையில். மிக குறுகிய காலத்தில் துரை வையாபுரிக்கு மிகப் பெரிய பதவி வழங்கப்பட்டு இருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாரிசு அரசியலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த வைகோ இனிமேல் எப்படி? தமிழக மக்களை சந்தித்து வாரிசு அரசியலுக்கு எதிராக பேச முடியும் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
👌👌👍