கணபதி ஹோமம் நடத்தியதால் வாகனங்கள், பூஜை பொருட்களை அடித்து நொறுக்கிய DYFI !

கணபதி ஹோமம் நடத்தியதால் வாகனங்கள், பூஜை பொருட்களை அடித்து நொறுக்கிய DYFI !

Share it if you like it

அரசாங்க பள்ளியில் கணபதி ஹோமம் நடத்தியதால் பிரச்சனை செய்து அங்கிருந்த வாகனங்களை உடைத்தும், பூஜை பொருட்களை அடித்து நொறுக்கி பூஜை நடைபெறுவதை தடுத்து நிறுத்தியுள்ளதாக இந்து முன்னணி பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள நெடுமுன்னாள் பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள், பள்ளி நலனுக்காக இரவு நேரத்தில் ஒரு வகுப்பறையில் கணபதி ஹோமம் நடத்தினர் .அப்பொழுது அங்கு வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த (DYFI) நபர்கள்
அரசாங்க பள்ளியில் எப்படி கணபதி ஹோமம் நடத்தலாம் என்று பிரச்சனை செய்து அங்கிருந்த வாகனங்களை உடைத்தும், பூஜை பொருட்களை அடித்து நொறுக்கி பூஜை நடைபெறுவதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பள்ளி நிர்வாகத்தினர் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து DYFI அமைப்பைச் சேர்ந்தவர்கள் கவர்னரின் கார் மீது கல்லெறிவது, அவரின் உருவபொம்யை எரிப்பது போன்ற வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கம்யூனிஸ்ட் அமைப்புகளின் வன்முறை கேரளத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

கடவுளின் தேசம் என்று புகழப்படும் கேரள மாநிலத்தில் கடவுளை வணங்க கூட அச்சம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி கவனத்தில் கொண்டு பெரும்பான்மை இந்துக்களின் வழிபாட்டு உரிமைக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது.


Share it if you like it