வேட்பாளருக்கே டூப் போட்ட ஒரே கோஷ்டி, நம்ம தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி கரகாட்ட கோஷ்டிதான்!

வேட்பாளருக்கே டூப் போட்ட ஒரே கோஷ்டி, நம்ம தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி கரகாட்ட கோஷ்டிதான்!

Share it if you like it

ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு பதிலாக வேறொரு நபரை வைத்து பிரசாரம் செய்யும் விவகாரம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. வேட்பாளருக்கே டூப் போட்ட ஒரே கட்சி நம்ம காங்கிரஸ்தான் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா., திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து, அத்தொகுதிக்கு எதிர்வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தி.மு.க. கூட்டணியில் இத்தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, அக்கட்சியின் மூத்த தலைவரும், மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். அதேபோல, அ.தி.மு.க.வில் ஈ.பி.எஸ். அணியைச் சேர்ந்த தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தே.மு.தி.க. சார்பில் ஆனந்த் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். தவிர, சுயேட்சையாக 80-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.

இதையடுத்து, அ.தி.மு.க., நாம் தமிழர், தே.மு.தி.க. மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், தி.மு.க. கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளங்கோவன் மட்டும் பிரசாரத்துக்கே வரவில்லை என்பதுதான் லேட்டஸ்ட் டாபிக். அதாவது, இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்ததோடு சரி, அதன் பிறகு ஈரோடு தொகுதிப் பக்கமே வரவில்லை. அதேசமயம், தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, எ.வ.வேலு, கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி என பெரிய பட்டாளமே இளங்கோவனுக்காக பிரசாரம் செய்து வருகிறார்கள். இதில், வேடிக்கை என்னவென்றால், இளங்கோவனுக்கு பதிலாக, டூப் போட்டு இளங்கோவன் சாயலில் இருக்கும் வேறொருவரை வேட்பாளராகக் காட்டி பிரசாரம் செய்து வருகிறார்கள் என்பதுதான்.

இந்த விவகாரம்தான் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்தியாவிலேயே ஏன் இந்த வேர்ல்டுலேயே வேட்பாளருக்கு டூப் போட்ட ஒரே கோஷ்டி நம்ம கரகாட்ட கோஷ்டிதான் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அதேசமயம், ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர்களோ, தேர்தல் பிரசாரத்துக்கே இளங்கோவன் வரவில்லை. அப்படி இருக்க, இவர் தேர்தலில் வெற்றிபெற்றால் எப்படி தொகுதிப் பக்கம் வருவார். நமக்கெல்லாம் நல்லது செய்வார் என்று வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். எனவே, இத்தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி வேட்பாளரான தென்னரசு வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தொகுதி மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.


Share it if you like it