ஈரோடு ராமசாமி சுயநலவாதி? நடிகர் மம்முட்டி அதிரடி!

ஈரோடு ராமசாமி சுயநலவாதி? நடிகர் மம்முட்டி அதிரடி!

Share it if you like it

ஈரோடு வெ.ராமசாமி சுயநலவாதி, ஒழுக்கம் கெட்டவர் என்கிற ரீதியில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, தமிழ் நடிகர் சத்யராஜுக்கு பதிலடி கொடுத்திருப்பதுதான் ஹைலைட்!

சமீபத்தில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பின்போது, தமிழகத்தின் அலங்கார ஊர்தி பங்கேற்று பவனி வந்தது. இந்த ஊர்தியில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவ பொம்மை இடம்பெற்றிருந்ததோடு, திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்த மறைந்த ஈரோடு ராமசாமியின் உருவபொம்மையும் இடம்பெற்றிருந்தது. இது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியதோடு, ராமசாமி என்ன சுதந்திரப் போராட்ட தியாகியா என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது.

இந்த சூழலில்தான், ஈரோடு ராமசாமியைப் பற்றி கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டி சொன்ன விஷயம் நினைவுக்கு வருகிறது என்கிறார் ஒரு பழம்பெரும் நடிகர். அதாவது, தமிழில் வில்லனாக இருந்த நடிகர் சத்யராஜ், ஹீரோ அந்தஸ்த்துக்கு உயர்ந்ததுக்கு மம்முட்டியின் படங்கள்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆம், மம்முட்டி நடித்த மலையாள படங்களை தமிழில் ரீமேக் செய்து ஹீரோவாக நடித்தார் சத்யராஜ். இதுதான் அவரை தமிழ்த் திரையுலகில் ஹீரோவாக தலைநிமிர்த்தியது. ஆனால், காலப்போக்கில் பெரியாரிஸ்ட்டாக அவதாரம் எடுத்தார் சத்யராஜ். இதனால், ஹீரோ வாய்ப்புகள் மட்டுமல்ல, பட வாய்ப்புகளும் குறைந்து பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்டார்.

இது ஒருபுறம் இருக்க, கடந்த சில ஆண்டுளுக்கு முன்பு தமிழகத்தில் நடந்த ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் மம்முட்டி, சத்யராஜ் ஆகியோர் ஒன்றாக கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ், ‘ஆரம்ப காலத்தில் வில்லனாக இருந்த நான், மம்முட்டியின் படங்களை ரீமேக் செய்துதான் ஹீரோவாக ஆனேன்’ என்று உண்மையை ஒப்புக்கொண்டார். ஆனால், அடுத்து பேசியதுதான், அவர் மூக்குடைபட காரணமாக அமைந்து விட்டது. அதாவது, ‘எங்களுக்குள் சமூகப் புரட்சியையும், போராட்ட எண்ணங்களையும் விதைத்தவர் பெரியார். மூட நம்பிக்கைகளை ஓட ஓட விரட்டி அடித்தவர். அதேபோல, உங்களுக்கு யாராவது இருக்கிறார்களா?’ என்று மம்முட்டியிடம் அதிமேதாவித்தனமாகக் கேட்டார்.

கேரளாவைப் பொறுத்தவரை நடிகர்கள் அரசியலுக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் மக்கள் அவர்களை மதிப்பதுமில்லை, ஓட்டுப்போடுவதும் இல்லை. அதேபோல, நடிகர்கள் யாரும் அரசியல்வாதிகளுக்கு ஒத்து ஊதுவதும் இல்லை, ஜால்ரா போடுவதும் இல்லை. தங்களது ஹீரோவாக அரசியல்வாதிகளை பார்ப்பதும் இல்லை. எனவே, மம்முட்டி வழக்கமான தனது பாணியில், ‘அடுத்தவர்கள் தங்களது சுயநலத்துக்காக ஆயிரம் சொல்வார்கள். அவர்கள் யாரையும் நாங்கள் நம்புவதில்லை. காரணம், அவர்களிடம் ஒழுக்கமும் இருக்காது’ என்று நெத்தியடியாக பதிலளித்து சத்யராஜின் மூக்கை உடைத்தார். அதாவது, சுயமாக சிந்திக்கும் எண்ணம் எங்களிடம் இருக்கிறது. அடுத்தவர்கள் சொல்வதை கேட்க வேண்டியது அவசியமில்லை என்று நாசுக்காகத் தெரிவித்ததோடு, பெரியாரின் ஒழுக்கக் கேடான செயலை குத்தியும் காட்டினார். இதனால், சத்யராஜின் முகத்தில் ஈயாடவில்லை. ஏன்டா கேட்டோம் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார் சத்யராஜ்.

ஆனால், அப்படிப்பட்ட ஈரோடு ராமசாமியை சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு இணையாக அலங்கார ஊர்தியில் இடம்பெறச் செய்திருக்கிறது தமிழக அரசு. இதுதான் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்று தனது வேதனையை பதிவு செய்கிறார் அந்த பழம்பெரும் நடிகர்.




Share it if you like it