திமுகவின் குடும்ப அரசியலை அடியோடு வெறுப்பதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக ஆரம்பித்தபோது அவர்கள் தத்துவம் வேறாக இருக்கலாம் என்றும் இப்போது வேறாக இருக்கிறது என்றும் குறிப்பிட்ட அண்ணாமலை அந்த கட்சியில் குடும்ப அரசியல் கலந்து விட்டதாக விமர்சித்தார். ஓபிசி இடஒதுக்கீடு குறித்து அடிப்படை தெரியாமல் ராகுல் காந்தி நாடாளுமன்றதில் பேசியிருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.