இதாங்க மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் வித்தியாசம்!

இதாங்க மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் வித்தியாசம்!

Share it if you like it

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவையும், மத்திய அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவையும் ஒப்பிட்டு, நெட்டிசன்கள் தமிழக அரசை விமர்சனம் செய்து வருகின்றனர்.

பொதுவாக மத்திய, மாநில அரசுகள் வழங்கும் விருதுகளில் யாருடைய புகைப்படமும் இருக்காது. குறிப்பாக, அரசியல் கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெறுவதில்லை. ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, விருதாக இருந்தாலும் சரி, நலத்திட்ட உதவிகளாக இருந்தாலும் சரி, தி.மு.க.வின் முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் புகைப்படமும், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் புகைப்படமும் தவறாமல் இடம்பெற்று வருகிறது. அவ்வளவு ஏன், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களையும், தமிழக அரசின் திட்டங்களைப் போல சித்தரித்து, கருணாநிதி, ஸ்டாலின் புகைப்படங்களை அச்சிட்டு வருகின்றனர். இதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நம்மால் காணமுடிகிறது. இதனால், ஸ்டிக்கர் தி.மு.க. அரசு என்று பா.ஜ.க.வினர் கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான், திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவிலும் கருணாநிதி, ஸ்டாலின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதாவது, தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திரைப்பட விருதுகள் வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த விருது வழங்கும் விழா, இடையில் சில ஆண்டுகளாக தடைபட்டிருந்தது. இதையடுத்து, தடைபட்டிருந்த கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளை வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, செப்டம்பர் 4-ம் தேதி இவ்விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இவ்விழாவில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, வெள்ளக்கோவில் சுவாமிநாதன், மேயர் பிரியா ஆகியோர் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினர். இந்த விழாவில், விருதுகளுடன் வழங்கப்பட்ட சான்றிதழில் தமிழக அரசு சின்னத்துடன், கருணாநிதி மற்றும் ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தன.

அதேசமயம், 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. இவ்விழாவில், ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்துகொண்டு சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர் உட்பட பல்வேறு துறை கலைஞர்களுக்கு தேசிய விருதை வழங்கினார். இந்த விருதுடன் வழங்கப்பட்ட சான்றிதழில், இந்திய அரசின் சின்னம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. வேறு எந்த தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெறவில்லை. இதையடுத்து, அரசின் செலவில் நடந்தப்படும் விழாவில், தமிழக அரசு வழங்கிய சான்றிதழில் கருணாநிதி, ஸ்டாலின் புகைப்படம் இடம்பெற்றிருந்ததையும், மத்திய அரசு வழங்கிய சான்றிதழில் இந்திய அரசின் சின்னம் மட்டும் இடம்பெற்றிருந்ததையும் ஒப்பிட்டு, தி.மு.க. அரசை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


Share it if you like it