டெட்டால் போட்டு மூஞ்சியை கழுவுங்க… நிதியமைச்சர் பதிலடி!

டெட்டால் போட்டு மூஞ்சியை கழுவுங்க… நிதியமைச்சர் பதிலடி!

Share it if you like it

ஊழல் பற்றி பேசுவதற்கு முன்னால் டெட்டால் போட்டு உங்க மூஞ்சியை கழுவுங்க என்று காங்கிரஸ் கட்சிக்கு நிதியமைச்சர் தக்க பதிலடியை கொடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பாரதப் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும் போது இவ்வாறு கூறினார் :

ஊழலை பற்றி யார் பேசுவது என்று பாருங்கள். மத்திய அரசின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது காங்கிரஸ் கட்சியின் டி.என்.ஏ.வில் உள்ளது. குற்றச்சாட்டுக்களை கூறும் காங்கிரஸ் அதற்கான விளக்கத்தை அரசு அளிக்க முன்வரும் போது ஒன்று சலசலப்பை உருவாக்குகிறார்கள் அல்லது சபையை விட்டு வெளிநடப்பு செய்கிறார்கள்.

மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் (நவ., 2021 மற்றும் ஜூன் 2022) இரண்டு முறை வாட் வரியை குறைத்துள்ளது. அதே நேரத்தில் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த உடனேயே டீசல் மீதான வாட் வரியை உயர்த்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலம் அரசு இந்த மாதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை உயர்த்தியுள்ளது. கேரள மாநில அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கு 2 ரூபாய் சமூக பாதுகாப்பு வரியை உயர்த்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it