துருக்கி, சிரியா. லெபனான் உள்ளிட்ட நாடுகளில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்படும் என போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் பிராங்க் ஹூகெர்பீட்ஸ் தெரிவித்து இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அதிகாலை 4.17 மணியளவில் சிரியாவின் எல்லைக்கு அருகில் உள்ள தென்கிழக்கு துருக்கியில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானதாக வல்லரசு நாடுகளை சேர்ந்த புவியியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் காஸியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், உஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர், கிலிஸ் ஆகிய 10 நகரங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என துருக்கியின் உள்துறை அமைச்சர் சுலேமான் சோய்லு தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து, துருக்கி நாட்டிற்கு தேவையான உதவிகளை இந்திய அரசு செய்யும் என பாரதப் பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். அந்த வகையில், போர்கால அடிப்படையில் தேவையான நிவாரண பொருட்களை துருக்கிக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த பிராங்க் ஹூகெர்பீட்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவு உலக நாடுகள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு இதோ :
சீக்கிரம் அல்லது காலதாமதமாக 7.5 அளவில் துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படும் என கடந்த பிப்.23-ம் தேதி பதிவிட்டுள்ளார்.
துருக்கியில் நிலநடுக்கம் ஏற்படும் என முன்பே எச்சரித்திருந்தேன். ஆனால், துருக்கி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.