கனவு இல்லம் திட்டம்… ‘மீ டூ’ புகழ் வைரமுத்துவுக்கு வீடு? தெருவுலையா இருக்காரு… குமுறும் சமூக ஆர்வலர்கள்!

கனவு இல்லம் திட்டம்… ‘மீ டூ’ புகழ் வைரமுத்துவுக்கு வீடு? தெருவுலையா இருக்காரு… குமுறும் சமூக ஆர்வலர்கள்!

Share it if you like it

தமிழக அரசின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துக்கு வீடு வழங்கப்படவிருப்பதாக வெளியான தகவல், கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஒருபுறம் சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்குக் கொண்டிருக்க, மறுபுறம் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

சாகித்ய அகாடமி, ஞானபீடம் உள்ளிட்ட தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள் மற்றும் புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்ற தமிழக எழுத்தாளர்களை ஊக்க மற்றும் கௌரவப்படுத்தவும் வகையில், விருது பெற்றவர்களுக்கு வீடு வழங்க தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக, ‘கனவு இல்லம்’ என்கிற திட்டத்தை 2021-ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும், இந்த வீடுகள் விருது பெற்றவர்கள் வசிக்கும் மாவட்டம் அல்லது விரும்பும் மாவட்டத்தில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில், சாகித்ய அகாடமி விருது பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி திலகவதி, எம்.பி. வெங்கடேசன், ராமகிருஷ்ணன் உட்பட 16 பெருக்கு வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. இதில், நிகழாண்டு எழுந்தாளர்களும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த பட்டியலில்தான் கவிஞர் வைரமுத்து பெயரும் இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளியானது. இதுதான் சர்ச்சை கிளம்பி இருக்கிறது.

வசதி படைத்த கவிஞர் வைரமுத்துவுக்கு வீடு வழங்க முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதற்கு பதிலாக, ஏழ்மை நிலையில் உள்ள எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதேசமயம், பாலியல் உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியதோடு, தி.மு.க. ஆதரவாளர் என்பதற்காக வைரமுத்துவுக்கு வீடு வழங்குவது ஏற்புடையதல்ல என்று நெட்டிசன்கள் தி.மு.க. அரசை வறுத்தெடுத்து வருகின்றனர்.


Share it if you like it