பா.ஜ.க.வில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.!

பா.ஜ.க.வில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.!

Share it if you like it

அ.தி.மு.க. முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., மைத்ரேயன் இன்று பா.ஜ.,வில் இணைந்துள்ளார். இவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அழைப்பின் பேரில் பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். அக்கட்சியின் சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்துள்ளார். சமீப நாட்களாக அ.தி.மு.க.வில் அதிருப்தியில் இருந்து வந்த அவர், அக்கட்சியில் இருந்து விலகி, டில்லியில் பா.ஜ.,வின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் தம்மை அக்கட்சியில் இணைத்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it