ஞானவாபி மசூதியில் சிவலிங்கம்: அறிவியல் ஆய்வு நடத்த உத்தரவு!

ஞானவாபி மசூதியில் சிவலிங்கம்: அறிவியல் ஆய்வு நடத்த உத்தரவு!

Share it if you like it

ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அறிவியல் ஆய்வு நடத்தும்படி இந்திய தொல்லியல் துறைக்கு அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி அமைந்திருக்கிறது ஞானவாபி மசூதி. இந்த மசூதியின் சுற்றுச் சுவரில் சிருங்கார கவுரி அம்மன் சிலை அமைந்திருக்கிறது. மேலும், காசி விஸ்வநாதர் கோயிலில் வெறும் நந்தி மட்டும் இருப்பதால், எதிரே உள்ள ஞானவாபி மசூதியில்தான் சிவலிங்கம் இருக்க வேண்டும் என்று ஹிந்துக்கள் கூறிவந்தனர். இந்த சூழலில், சிருங்கார கவுரி அம்மனுக்கு தினசரி பூஜை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று டெல்லியைச் சேர்ந்த 5 பெண்கள் வாரணாசி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்துமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், ஒரு குழுவையும் நியமித்தனர். இக்குழுவினர் நடத்திய ஆய்வில் மசூதிக்குள் சிவலிங்கம் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் எந்தக் காலத்தை சேர்ந்தது என்பது குறித்து ஆராய ‘கார்பன் டேட்டிங்’ முறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஹிந்து மனுதாரர்கள் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இம்மனுவை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மசூதியில் அறிவியல் ஆய்வை மேற்கொள்ளுமாறு இந்திய தொல்லியல் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Share it if you like it